பத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியை தழுவிய பழனிசாமி மீதான நம்பிக்கையின்மையினால்தானோ என்னவோ தெரியவில்லை அதிமுக விருப்ப மனுவில் படு மந்தம் ஏற்பட்டிருக்கிறது.
நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 15ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. விருப்ப மனுக்கல் தாக்கல் செய்வது இன்றுடன் நிறைவடைகிறது.

2016 சட்டமன்ற தேர்தலில் 26000க்கும் அதிகமான விருப்பமனுக்கள் அதிமுகவில் பெறப்பட்ட நிலையில் 2021 தேர்தலில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பமனுக்கள் பெறப்பட்டன. 2026 தேர்தலுக்கான விருப்பமனுக்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் நேற்று 22.12.2025 வரையிலும் 7085 மனுக்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று இறுதி நாள் என்கிற நிலையில் அதிகபட்சம் வந்தாலும் கூட 7500 மனுக்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. இதில் சுமார் 1500 மனுக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்காகவே கட்டப்பட்டுள்ளது.
ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், ஒரு மனுவுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 120 தொகுதிகளுக்கும் ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து 10 தேர்தலில்களில் தோல்வியைச் சந்தித்து வரும் பழனிசாமியின் மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் நம்பிக்கையை இழந்துள்ளர் என்பதையே காட்டுகிறது அதிமுக விருப்ப மனுவின் மந்தம். கட்சியினர் தேர்தலில் போட்டியிட ஆர்வமின்றி விருப்பமனு விற்பனை படு மந்தமானதில் அதிமுகவில் இரண்டாம்கட்ட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு இணையான செல்வாக்கு தனக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார் பழனிசாமி. ஆனால் உண்மை நிலவரம் வேறு ஒன்றாக இருக்கிறது. 2026 இருந்த விருப்ப மனுக்கள் படிப்படியாக சரிந்து வருவது பழனிசாமியின் மீதான செல்வாக்கு குறைந்து வருவதையும் காட்டுகிறது என்கின்றது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
