
மீண்டும் விவகாரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அபிஷேக் பச்சன். ஒரு லைக் போட்ட விவகாரத்தால் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யாராய் இருவரும் அவ்வப்போது விவாகரத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

பொது இடங்களில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக செல்லாமல் இருந்து வந்ததால், சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடராமல் இருந்து வந்ததாலும் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற வதந்திகள் பரவி வந்தன.
5.2.2024 அன்று அபிஷேக்பச்சனின் பிறந்த நாளில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து அபிஷேக் பச்சனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இதையடுத்து விவாகரத்து குறித்த சர்ச்சை ஓய்ந்தது.
அந்த சர்ச்சை மீண்டும் எழ காரணமாகி இருக்கிறது சமூக வலைத்தள பதிவு ஒன்று.

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் தனது சமூக வலைத்தளப்பதிவில், விவாகரத்து என்பது எளிதானது அல்ல. உறவுகளை துண்டிக்க எது தூண்டுகிறது? என்ன சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்? 50 வயதிற்கு பிறகு திருமணத்தை முறிக்க விரும்புவர்களுக்கான விதிமுறைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்று பதிவிட்டுள்ளார் அந்த எழுத்தாளர்.
இந்த பதிவுக்குக் லைக் போட்டிருக்கிறார் அபிஷேக் பச்சன். இதனால் ஐஸ்வர்ராயை விவாகரத்து செய்யும் மனநிலையில் உள்ளாரா? நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.