தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி அன்று நடைபெறுகிறது என்றும், அந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் மனு அளித்திருக்கிறார் தவெக பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த்.
முன்னதாக விஜய் தவெகவின் கொடியை அறிமுகம் செய்து வைத்ததில் சில சலசலப்புகள் எழுந்துள்ளன. கொடியில் உள்ள யானைகள் சின்னம் தேசிய கட்சியான தங்களின் சின்னம். அதை தவெக பயன்படுத்தக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்மாநிலத்தலைவர், தேர்தல் ஆணையத்தில் புகாரளித்திருக்கிறார்.
அதேநேரம், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கட்சிக்கொடி வெளியிட்ட விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட் படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் விசாரித்திருக்கிறார் நடிகர் அஜித்குமார். அப்போது, விஜய் பற்றியும் அவரது கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்திருக்கிறார்.
அப்போது, விஜய்யிடமே செல்போனில் தொடர்புகொண்ட வெங்கட்பிரபு, அஜித் சார் அருகே என்று சொல்லி போனை அஜித்திடம் கொடுத்திருக்கிறார்.
கோட் படம் குறித்து விஜய்யிடம் சில வார்த்தைகள் மட்டுமே பேசிய அஜித், தவெகவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிய ஆவலாக உள்ளேன் என்று சொல்லி, அது குறித்து விஜய்யிடம் சொல்ல, அவரும் அதுகுறித்து அஜித்திடம் 20 நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார்.