முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மீண்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்
- Bloomberg நிறுவனத்தின் பில்லியனர்கள் குறியீட்டில், முகேஷ் அம்பானி உலகளவில் 12-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்
- ஒரே நாளில் 2.76 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து மதிப்பு உயர்ந்ததால், கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்
- 2024-ம் ஆண்டு தொடக்கம் முதல் 17 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வீழ்ச்சியை சந்தித்தாலும், Tesla நிறுவனத்தின் எலோன் மஸ்க் 212 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறார்
- Amazon நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 180 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 2-ம் இடமும், பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் 164 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்
- இந்தியாவின் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி 96.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 14வது இடத்தில் உள்ளார்
Published by அசோக் முருகன்