ஆரம்பத்தில் இருந்தே 2026ல் தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி மலரும் என்று ஆணித்தரமாக சொல்லி வருகிறார் அமித்ஷா. கூட்டணி அரசியல் தமிழ்நாட்டிற்கு செட் ஆகாது என்று அதை மறுத்து வந்தார் எடப்பாடி.
நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனையிலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற டிமாண்ட் வைத்திருக்கிறார் அமித்ஷா. ’ஆணை’ என்கிற விதத்தில்தான் இருந்திருக்கிறது அந்த ‘டிமாண்ட்’. கூட்டணி ஆட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எவ்வளவோ மன்றாடிப்பார்த்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் அமித்ஷாவோ, ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கிறார். 56 சீட் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், துணை முதல்வர் பொறுப்பு மற்றும் 3 அமைச்சர்கள் பொறுப்பு பாஜகவுக்கு வேண்டும் என்று கறார் காட்டி இருக்கிறார்.

மறுப்பேதும் சொல்ல முடியாமல் அங்கே கையைப்பிசைந்து கொண்டிருந்த எடப்பாடி, இப்போது நிர்வாகிகளிடையே புலம்பி வருகிறாராம்.
அமித்ஷா சொன்னபடி நடக்கிறாரா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளவே நாளை எடப்பாடியை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்.
