கொழுமணிவாக்கம் ஊராட்சி கோயில் குளத்தில் உள்ள படிக்கட்டுகள் மற்றும் நடைபாதை அமைக்க 11.36 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டில் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
‘’காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் திட்டம்: AGAMT: 2022-23 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23 கொழுமணிவாக்கம் ஊராட்சி திருக்குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணி – மதிப்பீடு : ரூ.11.36 லட்சம்’’ என்று அந்த கல்வெட்டில் உள்ளது.
ஆனால், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் இதை வீடியோ எடுத்து, படிக்கட்டுகள் அமைக்க 11.36 லட்சமா? இந்த செலவில் ஒரு வீட்டையே கட்டிவிடலாமே என்று கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்னவென்றால், பட்டிக்கட்டுகள் அமைக்க மட்டும் அனிதா சம்பத் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த கல்வெட்டியிலேயே நடைபாதை அமைக்க என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படித்துறை அமைத்தல் – 1.70 லட்சம், நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி அமைக்க – 66 ஆயிரம், நடைபாதை அமைத்தல் பேவர் ப்ளாக் – 6.17 லட்சம், மின் விளக்கு அமைக்க – 96 ஆயிரம் , மேசைகள் அமைக்க – 12 ஆயிரம் மற்றும் இதுக்கான gst மட்டும் – 1.73 லட்சம் மொத்தமாக சேர்த்துதான் 11 லட்சத்து 36 ஆயிரம் .
இவ்வளவு விளக்கமாக எல்லாம் கல்வெட்டில் எழுதிவைக்க முடியாது. செய்தி வாசிப்பாளராக இருந்தவருக்கே இது தெரியவில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.