
தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று 90 சதவிகித முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய தலைவர் நாற்காலியை பிடிக்க நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
அண்ணாமலை எந்த நாட்டிற்குச் சென்றாலும் பரவாயில்லை; அங்கிருந்தபடியே அவர் கட்சியை நிர்வகிக்க முடியும் என்று டெல்லி தலைமைக்கு பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், புதிய தலைவர் வேண்டும் என்றே தலைமைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

நயினார் நாகேந்திரனை தலைவராகப்போட்டால் அதிமுகவுடன் கூட்டணி பேச வசதியாக இருக்கும் என்று தலைமை ஆலோசித்து வருகிறது என்கிறது கமலாலயம். ஆனால், வானதி சீனிவாசனை தலைவர் பதவிக்கு கொண்டு வர ‘ஈஷா’ ஜக்கிவாசுதேவும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் முயன்று வருவதாகவும் தகவல்.

பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் என்ற குற்றச்சாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கட்சியில் அதிக செல்வாக்கும், ஆளுமையும் கொண்டவர் கே.டி.ராகவன். அவரை மாநிலத்தலைவராக கொண்டு வரவேண்டும். அப்போதுதான் உட்கட்சிப்பூசலை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறாராம் நிர்மலா சீதாராமன்.