ஆரியப் படையெடுப்பை நிராகரித்து வரலாற்றுப் பாடங்களில் NCERT அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள்; ஆரிய படையெடுப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி NCERT அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
‘5,000 ஆண்டுகாலமாக எந்த இடறுமின்றி இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்’ என NCERT 12-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
‘ஹரப்பா மக்களின் மரபணு இன்று வரை தொடர்கிறது; மேலும் தெற்காசிய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் ஹரப்பா மக்களின் வழித்தோன்றல்களே’, என NCERT கூறுகிறது.
ஆரம்ப கால ஹரப்பா மற்றும் பிற்பகுதி ஹரப்பா நாகரிகங்களுக்கு இடையே ‘இடைவெளி இருந்தது’ பற்றிய தகவல்களும் NCERT பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன.
‘ஹரப்பன்களுக்கும் வைதீக(Vedic) மக்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தியும் புதிய பாடத்தில் NCERT சேர்த்துள்ளது.
‘ஹரப்பா மக்களும் வைதீக மக்களும் ஒருவரே’ எனக் கூறி ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை வலதுசாரிகள் தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆரியர்களின் குடியேற்றத்தை நிராகரிக்க (ஹரியானா) ராக்கிகாரி தளத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியைக் NCERT குறிப்பிடுகிறது.
இந்தப் புதிய மாற்றங்களை 2024-25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த NCERT திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.