தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர் அஸ்வின் ராமசாமி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண செனட் சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் gen z இந்திய -அமெரிக்கர் ஆவார். 97ஜெனரேஷன் z என்பது 19ல் இருந்து 2012ம் ஆண்டிற்குள் பிறந்த தலைமுறை ஆகும். அஸ்வின் ராமசாமி இரண்டாம் தலைமுறை இந்திய -அமெரிக்கர்.
24வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, சிவில் ஊழியராக இணைய பாதுகாப்பு, தேர்தல் பாதுகாப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். தொழில்நுட்பம், சட்டம், கொள்கை ஆராய்ச்சி துறைகளிலும் அனுபவம் பெற்றவர்.
இரண்டாம் தலைமுறை இந்திய – அமெரிக்கரான அஸ்வின் ராமசாமியின் பெற்றோர் இருவருமே தகவல் தொழில்நுட்ப துறையினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
1990களில் இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். அஸ்வின் ராமசாமியின் தந்தை கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். தாய் சென்னையைச் சேர்ந்தவர். அமெரிக்க பாரம்பரியத்தில் வளர்ந்தாலும் இந்திய பாரம்பரியத்தையும் கடைபிடித்து வந்தவர் அஸ்வின் ராமசாமி. தான் ஒரு இந்து என்பதிலும், தன் வாழ்நாள் முழுவதிலும் இந்திய கலாச்சாரம் மீதிலும் இந்து தத்துவங்கள் மீதிலும் தனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது என்று சொல்கிறார் அஸ்வின் ராமசாமி.
யோகா, தியானத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையினை மிகுந்த ஆர்வத்துடன் படித்து அறிந்து கொண்டிருக்கிறார். கல்லூரி நாட்களில் சமஸ்கிருதம் படித்துள்ளார்.
இந்த தேர்தலில் அஸ்வின் ராமசாமி வெற்றி பெற்றால் ஜார்ஜியாவின் 48ஆவது மாவட்டத்தின் முதல் இந்திய -அமெரிக்க மாநில செனட்டர். ஜார்ஜியாவின் முதல் gen z மாநில ஜெனட்டராகவும், கணினி அறிவியியல், சட்டம் படிப்பு பட்டம் பெற்ற ஒரே ஜார்ஜியா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பார்.