ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 10 முதல், 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் Facebook, Instagram, Threads போன்ற Meta நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது. இதற்கான முன் அறிவிப்புகள், கணக்கு நீக்கல் நடவடிக்கைகள், வயது சரிபார்ப்பு முறைகள் என பல்வேறு செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சட்டம் அமலுக்கு வருவதால், சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகளிலும், பயனாளர்களின் அனுபவத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன.
இந்த தடையினை ஏன் கொண்டு வந்தார்கள்? மெட்டா எப்படி செயல்படப் போகிறது? இந்த விதிமுறைக்கு என்ன குறைகள் உள்ளன?
ஏன் இந்த வயது வரம்பு தடை?
ஆஸ்திரேலிய அரசின்(Australia Govt) புதிய சட்டப்படி, 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கங்கள்:
- குழந்தைகளை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பது
- சமூக வலைத்தளங்களால் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது
- தனியுரிமை பாதுகாப்பை அதிகப்படுத்துவது
இந்த சட்டத்தை மீறினால், சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் Meta, TikTok, Snapchat, X, Reddit, Twitch போன்ற பல நிறுவனங்கள் கட்டாயமாக விதிகளுக்கு இணங்கி வருகின்றன.
Meta ஏன் விரைவாக இணங்குகிறது?
Meta நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பே 13–15 வயதுடைய ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு அறிவிப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.
அதில்:
- உங்கள் டிஜிட்டல் ஹிஸ்டரி (டேட்டா) ஐ பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்
- உங்கள் கணக்கை நீக்குவதற்கு தயார் ஆகவும் என்று தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 10 சட்டம் அமலுக்கு வந்த பின்னர்தான் உண்மையான கணக்கு நீக்கல் நடைபெறும் என்று Meta தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த நாளிலேயே அனைத்துக் கணக்குகளும் நீக்கப்படுமா என்பதை நிறுவனமே உறுதி செய்யவில்லை. காரணம்: வயது சரிபார்ப்பு என்பது பல கட்டங்களைக் கொண்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கணக்குகளின் நிலை
அந்நாட்டின் இணைய ஒழுங்குமுறை அமைப்பு (ACMA) அளித்த தகவல்படி:
- Facebook இல் 13–15 வயதுக்குட்பட்டவர்கள் – 1,50,000 பயனர்கள்
- Instagram இல் 13–15 வயதுக்குட்பட்டவர்கள் – 3,50,000 பயனர்கள்
இத்தடை Meta Messenger பயன்பாட்டுக்கு பொருந்தாது.
இதனால் சுமார் 5 லட்சம் கணக்குகள் நேரடியாக பாதிக்கப்படலாம்.
Meta எப்படி வயதைக் கண்டறிகிறது?
இது தற்போது பெரிய சிக்கல்.
பொதுவாக Meta பயன்படுத்தும் வயது சரிபார்ப்பு முறைகள்:
1. பயனர் விபரங்களை புதுப்பிக்கச் சொல்வது
பயனர்கள் தங்கள்:
- மொபைல் எண்
- ஈமெயில் அட்ரஸ்
புதுப்பிக்க வேண்டும். அவர்கள் 16 வயதாகும் போது Meta அவர்கள் கணக்கை மீண்டும் திறக்க தகவல் அனுப்பும்.
2. தவறான வயது கணிப்புகள் – மிகப்பெரிய கவலை
ஆஸ்திரேலிய அரசின் Age Estimation ஆய்வில்:
- முகஅடையாளம் மூலம் வயது கணிக்கும் முறையில் 8.5% வரை தவறான நிராகரிப்பு ஏற்பட்டுள்ளது.
- 16, 17 வயதான பலரையே தவறாக ‘under 16’ என குறித்துள்ளது.
3. சரியான வயது நிரூபிப்பது எப்படி?
பயனர்கள் இரு வழிகளில் வயதை உறுதிப்படுத்தலாம்:
✔ அரசு வழங்கிய அடையாள அட்டை (ID)
Passport / Driving licence போன்றவை.
✔ Yoti என்ற மூன்றாம் தரப்பு வீடியோ செல்பி வயது கணிப்பு
Meta கூறியதாவது:
- பயனர்களின் வீடியோ அல்லது ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு அழிக்கப்படும்.
- ஆனால், இந்த தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் தனியுரிமையை பாதிக்குமோ என்ற அச்சம் நிபுணர்களிடையே உள்ளது.
1. எல்லோருக்கும் பொருந்தும் ‘Blanket Ban’ என்பது சரியான தீர்வல்ல
Meta-வின் பாதுகாப்புத் துறைத் தலைவர் Antigone Davis கூறியது:
- அனைத்துக் குழந்தைகளும் சமூக வலைத்தளத்தில் தீங்கில் சிக்குகிறார்கள் என்று பொதுவாக நினைத்து தடை விதிப்பது தவறு
- சமூக வலைத்தளங்களில் உள்ள கல்வி, தகவல், சமூக ஆதரவு போன்றவை பல குழந்தைகளுக்கு உதவுகின்றன
- இந்த தடையால் அவர்கள் சமூக வட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்படலாம்
2. சரியான வயது கணிப்பு தொழில்நுட்பம் இன்னும் முழுமையில்லை
முகஅடையாளம், குரல் அடையாளம், ஆன்லைன் நடத்தை அடிப்படையில் வயதை கண்டறிதல் — அனைத்தும் 100% துல்லியமானவை அல்ல.
3. குழந்தைகள் விதியை விலக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்
இது Meta-வின் மிகப் பெரிய கவலை:
- போலி வயது
- பிறர் கணக்கைப் பயன்படுத்துதல்
- VPN மூலம் பதிவு
இதனை கட்டுப்படுத்த Meta துல்லியமான முறைகளை இன்னும் வெளியிடவில்லை.
Apple/ Google App Store-ஐ பயன்படுத்தி வயது சரிபார்க்க வேண்டும் — Meta வின் கோரிக்கை
Meta விரும்புவது:
- App Store / Play Store பயனர் வயதைக் கண்டறிய வேண்டும்
- அவர்கள் 16 வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே சமூக வலைத்தளங்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்
- இதனால் பயனரின் தனியுரிமை மேம்படும்
- எல்லா நிறுவனங்களுக்கும் ஒன்று போல விதிகள் இருக்கும்
ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்பது இன்னும் கேள்விக்குறி.
மற்ற நிறுவனங்களின் நிலை
- TikTok, Snapchat – சட்டத்துக்கு இணங்கத் தயாராக உள்ளன
- YouTube – இந்தத் தடை தங்களுக்கு வேண்டியதல்ல என்றும், சட்டரீதியாக போராடுவோம் என குறிப்பிட்டுள்ளது
- Roblox, Discord – ஏற்கனவே சில வயது வரம்புகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தத் தடை எதை நோக்கி செல்கிறது?
ஆஸ்திரேலிய பிரதமர் Albanese கூறியது:
- இது முதல் முயற்சி
- சிஸ்டத்தில் பிழைகள் இருக்கும்
- ஆனாலும், சமுதாயத்திற்கு வலுவான ‘பாதுகாப்பு’ செய்தி அனுப்பும் முயற்சி இது
இது ‘சரியா? தவறா?’ என்ற விவாதம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவின் இந்தப் புதிய சட்டம் சமூக வலைத்தளப் பயன்படுத்துதலில் பெரிய திருப்புநிலையில்.
குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், செயல்முறை குறைபாடுகள், தொழில்நுட்ப தவறுகள், தனியுரிமை பிரச்சினைகள் ஆகியவை இன்னும் தீர்க்கப்பட வேண்டியது தான்.
Meta மற்றும் மற்ற பெரிய நிறுவனங்கள் எப்படி இந்த விதியை முழுமையாக அமல்படுத்தப் போகின்றன என்பதையும், குழந்தைகளின் பாதுகாப்புக்கும், அவர்களின் ஆன்லைன் உரிமைக்கும் இடையில் சமநிலை எப்படி கிடைக்கும் என்பதையும் எதிர்வரும் காலங்கள் தீர்மானிக்கும்.
