அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை மொத்த படமாக எடுத்து பூதாகரமாக்கி பெற்றோர்களை அதிரவைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதிலும் பிராமண சமூகத்தை பெரிதாக கொந்தளிக்க வைத்திருக்கிறார். படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்போகிறோம் என்று ஆத்திரப்படு அளவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
படிக்கிற வயசுல பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பு. அதை மீறி ஒழுக்கக்கேடான விசயங்களில் ஆர்வம் காட்டி வரும்போது அதை தட்டிக்கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பெற்றொர்களை மிரட்டுவதும், உண்மையிலேயே தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது என்பதற்காக அதை படமாக எடுத்து இதுமாதிரியான சம்பவங்கள் அதிகரிக்க பிரச்சாரம் செய்வது போன்று உள்ளது பேட் கேர்ஸ் படத்தின் டீசர்.
படிப்பில் கவனம் செலுத்துவதை விட காதலிப்பது, சரக்கு அடிப்பது, ஆண் நண்பருடன் இணைந்து இருப்பது போன்று சமூகத்திற்கு அதிர்ச்சி தரும் காட்சிகள் நிறைந்து இருக்கின்றன பேட் கேர்ஸ் படத்தில். ஒரு டீசரே இப்படி என்றால் இன்னும் முழுப்படமும் என்னமாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகுதோ?
அதிலும் அந்த மாணவி பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது மாதிரி சித்தரித்துள்ளதற்கு பிராமண சமூத்தினைரையும் அதிகம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள். Bad Girl பட டீசரில் பிராமண பெண்களை தவறாக சித்தரித்து உள்ளதாக ரங்கராஜ் பாண்டே, மதுவந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிராமண பெண் ஒருவர் கேட்டரிங்க படிக்கிறார். அதற்காக அசைவம் சமைக்கிறார் என்று எடுத்த அன்னபூரணி படத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். அதே போன்று இந்தப்படத்தையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அனுராக் காஷ்யப் உடன் இணைந்து இந்த படத்தினை தயாரித்திருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் டீசரைப்பார்த்து விட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.
எந்த எந்த படத்தையோ தடை பண்ணுறீங்க இதை தடை பண்ணுங்கப்பா. நாம் இது போன்ற படத்தை எதிர்க்க வேண்டும், நம் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் பற்றி விழிப்புணர்வு சொல்லவேண்டும்.
தரமற்ற கதைகள், தரங்கெட்ட தமிழ் திரைத் துறையினர் மற்றும் தூங்கும் திரைப்பட வாரியம். எல்லா செயல்களுக்கும் ஆட்டத்திற்கும் நிச்சயமாக முடிவு உண்டு. காலம் பதிலளிக்கும்.
நமது தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கவேண்டும் . ஆனால் அதை பாப்பான் வீட்டு பெண் என்று காட்டினால் யாரும் எதிர்கமாட்டார் என்ற ரீதியில் படம் எடுத்து அனைவரையும் பார்க்கவைத்து இவனுக்கு கோடிகளை எடுத்துக்கொண்டு யாருடன் யார் வாழ்ந்தால் என்ன கற்பு என்பது கிடையாது பெண் அவள் மணம் போல் வாழ்கை வாழலாம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்க முற்படுகின்றது போல் தெரிகின்றது இந்த திரைப் படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் இந்த படத்தை பாராட்டுபவர்கள் முதலில் இந்த படத்தை உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு போட்டு காட்டுங்கள். இந்த படத்தில் வருகிற பெண் மாதிரி உங்க வீட்டு பெண் பிள்ளைகள் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
சாதி ஒழியனும். ஆனா கதாபாத்திரம் பிராமின் பெண் என இப்படி என show case பண்ணனும். அப்போ இதுக்கு பேரு type casting இல்லயா வெற்றி மாறன். இந்த கருமத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது. இனி வரும் வெற்றிமாறன் படம் எதுக்கும் போகக் கூடாது.
மனித சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய படங்களில் இதுவும் ஒன்று. யாராவது பொதுநல வழக்கு தாக்கல் செய்து இப்படத்தை தடை செய்ய கோரினால் நன்றாக இருக்கும். அது மட்டுமல்ல, எந்த ஒரு OTTயிலும் வரக்கூடாது. வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களிடம் இது போன்ற கதைதான் எதிர்பார்க்க முடியும். மக்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். எதை பார்ப்பது என்று.
யாரெல்லாம் வெற்றி மாறன் தீவிரவாத, சமூக சீரழிவு படங்களை எடுப்பதை கவனித்தீர்கள்? ஏண்டா உனக்கு இந்த உதாரணங்கள் சொல்ல பிராமண சமூகம் தான் கிடைத்ததாடா?
தடை செய்ய வேண்டிய படம். இந்தப் படத்தை வெளியில் விடுவது வேறு ஒரு சீர்கேடு வேறு. கலாச்சார சீரழிவை நோக்கி தமிழ் சினிமா. இதற்கு வெற்றி மாறன் போன்ற சிலர் டைரக்டர் என்ற போர்வையில் குள்ள நரிகள்.
படிக்கும் பருவத்தினர் பெரும்பாலும் 18 வயதுக்கு கீழ் இருப்பார்கள்.21 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு போதைப் பொருள் விற்பது குற்றம். சிறுவர்கள் போதைப் பொருள் உபயோகிப்பது போல் படம் எடுத்தால் குற்றமில்லையா? இந்தப் படம் தடை செய்யப் பட வேண்டும்.
இந்தப் படம் வெளிவரக் கூடாது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த மாதிரி தரம் கெட்ட படங்கள் வருவதை தவிர்க்க முடியும். இதை தடை செய்தால் தான் இதன் மூலம் கிடைக்கும் நஷ்டத்தினால் இதை தயாரித்தவருக்கும், இயக்கியவருக்கும், நடித்தவர்களுக்கும் புத்தி வரும்.
காலாச்சார சீர்கேடு அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை உங்களுக்க தேவையானது பணம், காசுக்காக எதையும் செய்யும் கூட்டம். பெண் சுதந்திரம் , வெற்றிமாறன் பார்வையில்.
அடுத்த தலைமுறையை கெட்டு குட்டி சுவரா ஆக்குங்கள். வளரும் பெண்பிள்ளைகள் வளரும் பொழுதே வழி தவறும் எண்ணம் இப்படத்தைப் பார்த்தாலே தோன்றும். தயவுசெய்து இப்படத்தை வெளியிட வேண்டாம்
இப்படி படங்கள் வருவதால்தான் பெண்கள் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் தவறான பாதைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற சினிமாக்களை நாம் எதிர்க்கவேண்டும்.
இளைய சமுதாயம் குடியாலும் புகையாலும் போதைப்பொருள்களாலும் மற்றும் பல கெட்டப் பழக்க வழக்கங்களாலும் சீரழிந்துகிடப்பது போதாதா? நீங்க வேற சொல்லிக் கொடுக்கணுமா? இந்தத் திரைப்படத்தை அரசாங்கம் தடை செய்யவேண்டும் என்ற கண்டனங்கள் வலுத்து வருகின்றன.