* ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தபோது, அமலாக்கத்துறை செய்தது அடாவடி என்றும், சீல் அகற்றப்பட வேண்டும் என்றும் ஆகாஷ்பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணையில், அமலாக்கத்துறைக்கு வீட்டை சீல் வைக்க உரிமையில்லாத பொழுது எப்படி சீல் வைக்கப்பட்டது? என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, வீட்டுக்கு சீல் வைக்கவில்லை. தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க கூடாது என்றுதான் நோட்டீஸ் ஒட்டினோம் என்று ஈடி தெரிவித்தது.

அதற்கு நீதிபதிகள், தன் வீட்டுக்கு செல்ல அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா? என்று கேட்டு, நோட்டீஸ் ஒட்டவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சட்டவிரோதமான ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்தனர் நீதிபதிகள். இது ஆகாஸ் பாஸ்கரன் வழக்கில் ED-யின் முதல் சொதப்பல் ஆகும்.
*நீதிமன்ற விசாரணையின் போது ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், 2014 -2021 காலகட்டத்தில் டாஸ்மாக்கில் நடந்த முறைகேடு தொடர்பாகத்தான் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடத்தியது அமலாக்கத்துறை. அந்த காலகட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்றுகொண்டிருந்தார் என்றார். இது ED-யின் 2ஆவது சொதப்பல் ஆகும்.
*டாஸ்மாக் முறைகேடு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப் டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ED-யின் 3ஆவது சொதப்பல் ஆகும்.

* போதிய ஆதாரங்கள் இல்லாமல் தொடரப்பட்ட வழக்கு என்பதால் ஆகாஷ் பாஸ்கரன் மீதான மேல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது ED-யின் 4ஆவது சொதப்பல் ஆகும்.
*இந்த தடை உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியதால் அமலாக்கத்துறையினர் மீது நீதிமன்ற அவமதிக்கு வழக்கு தொடர அனுமதி அளித்ததை அடுத்து ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்தார். இது ED-யின் 5ஆவது சொதப்பல் ஆகும்.
*ஆகாஷ் பாஸ்கரன் , விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததால் ஈடிக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 2 முறை அபராதம் விதித்தும் பதில் மனு தாக்கல் செய்யாதது சரியான நடவைக்கை அல்ல என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இது ED-யின் 6ஆவது சொதப்பல் ஆகும்.
*ஆகாஷ் பாஸ்கரனின் கார் டிரைவர் துரைராஜிடம் ஆங்கிலத்தில் வாக்குமூலம் வாங்கி கையெழுத்து வாங்கியதாக நீதிமன்றமத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில், தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொன்ன பிறகும் அமலாக்கத்துறைதான் தன்னை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறினார். .இது ED-யின் 7ஆவது சொதப்பல் ஆகும்.

*டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டின் அருகே குப்பையில் மதுபான கொள்முதல், மதுபான டெண்டர் குறித்த 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் உரையாடல்களின் நகல்களை ஈடி அதிகாரிகள் கைப்பற்றியதாக சொல்லப்பட்ட நிலையில் பின்னர் அது தேதியின் அடிப்படையில் போலி என்று தெரியவ ந்தது. இது ED-யின் 8ஆவது சொதப்பல் ஆகும்.
*நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி ஆகாஷ் பாஸ்கரனிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்துள்ளது. இது ED-யின் 9ஆவது சொதப்பல் ஆகும்.
