ஏழு மாநிலங்களில் நடந்த 13 இடைத்தேர்தல்கள் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றி இருக்கும் நிலையில், இரண்டில் மட்டுமே பாஜக வென்று கடும் பின்னடவை சந்தித்திருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதனால்தான் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியிருக்கிறார் ராகுல்காந்தி. இதன் தொடர்ச்சியாக கடந்த 13ம் தேதி அன்று 7 மாநிலங்களில் நடந்த 13 இடைத்தேர்தலிலும் 10ஐ தட்டி தூக்கி இருக்கிறது இந்தியா கூட்டணி.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதி, மேற்கு வங்க மாநிலத்தில் 4 தொகுதிகள், பஞ்சாப்பில் 1 தொகுதி, பீகாரில் 1 தொகுதி, மத்தியப்பிரதேசத்தில் ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகள் , உத்தரகாண்டில் 2 தொகுதிகள் என்று 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 10ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடந்தது. 13ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையில் 11 தொகுதிகளில் வென்றது இந்தியா கூட்டணி.
இந்த வெற்றி இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு புதிய உற்சாகம் தந்திருக்கிறது. இதனால் அடுத்து வரும் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் நன்ற நம்பிக்கையில் உ ள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை பெரிதாக பிரச்சாரம் செய்து மக்களவை தேர்தலில் வென்றிடலாம் என்று நினைத்து அதையே செய்தது பாஜக. ஆனால், ராமர் கோயில் அமைந்திருக்கும் பைசாபாத்திலேயே தோல்வியை சந்தித்தது பாஜக. அது ஒரு அடி என்றால், இப்போது இடைத்தேர்தலிலும் இன்னொரு அடி விழுந்திருக்கிறது பாஜகவுக்கு. பாஜக ஆளும் உத்தரகாண்டில் இந்துக்களின் புனிதபூமியான பத்ரிநாத்திலும் தோல்வி அடைந்திருகிறது பாஜக.
13 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக அடைந்திருக்கும் தோல்வி, தேசிய அளவில் இது பாஜகவுக்கு அரசியல் தோல்வி என்ற விமர்சனங்கள் எழத்தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67, 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அமர்வாரா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கமலேஷ் பிரதாப். காங்கிரசில் இருந்து இவர் பாஜகவுக்கு தாவியதால் இடைத்தேர்தல் வந்தது. ஆனாலும் மீண்டும் பாஜக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் பாஜகவை வீழ்த்தி இருக்கிறது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ். உத்தரகாண்டில் பாஜக ஆட்சிதான். ஆனாலும் அங்கு 2 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸே வென்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் மோஹிந்தர் பாலிட தோல்வி அடைந்திருக்கிறார் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷீத்தல். பீகாரில் ரூபாலி தொகுதியில் சங்கர் சிங் சுயேட்சை வென்றிருக்கிறார்.
இமாச்சல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தெஹ்ராவை காங்கிரஸ் தட்டி தூக்கியது. நலகர் தொகுதியிலும் காங்கிரஸ்தான் வெற்றி. ஹமிர்பூர் தொகுதியிலும் கூட மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், 1,571 வாக்குகள் வித்தியாசத்தின் மட்டுமே பாஜகவிடம் தோற்றிருக்கிறது பாஜக.
மக்களவைத்தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது பாஜக. இடைத்தேர்தல் முடிவுகளும் கூட பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த ஏழு மாநில இடைத்தேர்தல் முடிவுகளும், மக்கள் மத்தியில் பாஜக கட்டி வைத்திருக்கின்ற மாயமலையை தகர்த்தெறிந்துள்ளது என்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி.