
Image Credit: Indian Express
இந்திய கார் உற்பத்தி துறையில் தனித்த இடத்தைக் கொண்டு இருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Ford நிறுவனம் இந்தியாவில் இருந்த 2 தொழிற்சாலையில் ஒன்றை TATA குழுமத்திற்கு விற்றுவிட்டு, சென்னையில் இருக்கும் தொழிற்சாலையை மட்டும் விற்காமல் 2021-ம் ஆண்டில் உற்பத்தியை நிறுத்தி அப்படியே கிடப்பில் போட்டது.

மேலும் Ford-ன் சென்னை தொழிற்சாலையை வாங்க TATA மோட்டார்ஸ், JSW குழுமம் உட்படப் பல நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தன. இந்நிலையில், ஆலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்ட Ford, புதிய ரக கார் உற்பத்தியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் புதிய ரக Endeavour காருக்கான காப்புரிமையை Ford நிறுவனம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னை தொழிற்சாலையைப் பயன்படுத்தித் தனது புதிய ரக Endeavour காரை இந்திய சந்தைக்குக் கொண்டு வரும் வேலையில் Ford நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் Endeavour காரை சர்வதேச அளவில் அறிமுகம் செய்த Ford, தாய்லாந்தில் ‘Ford Everest SUV’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.
இந்த தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், Ford Chennai-ன் அதிகாரப்பூர்வ LinkedIn பக்கத்தில் புதிய வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
Technical Anchor, ADAS Feature Owner, Software Engineer, Senior Data Engineer போன்ற பல்வேறு பதவிகளுக்கு பணியமர்த்தும் வேலையில் இறங்கியுள்ளது. சென்னையில் தனது உற்பத்தியை Ford நிறுவனம் கிக்ஸ்டார்ட் செய்ய விரும்புகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.