உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Center) ஈர்ப்பதில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
சென்னையில் உலகளாவிய திறன் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2023-ல் மட்டும் சுமார் 6.02 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட இடங்களை பல்வேறு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டில் 2.18 மில்லியன் சதுர அடி பரப்பளவில் குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை ஒப்பிடுகையில், இது 176 சதவீத வளர்ச்சியாகும்.
உலகளாவிய திறன் மையங்களை அமைக்க பெரு நிறுவனங்களுக்கு சென்னை விருப்பமான இடமாக திகழ்வதாக, Knight Frank India அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சென்னையில் திறன் மையங்களை அமைக்க, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் 71 ஒப்பந்தங்களை செய்துள்ளன.
இந்தியாவின் பிற நகரங்களை ஒப்பிடும்போது சென்னை முதலிடத்தையும், அதுத்தடுத்த இடங்களை ஹைதராபாத், பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்கள் பிடித்துள்ளன.