அதிகரித்து வரும் AI, Cloud Computing மற்றும் டிஜிட்டல் சேவை ஆகியவற்றின் பயன்பாடுகளால், டேட்டா சென்டர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கொள்ளப்படும் புதிய திறன் விரிவாக்கங்களில் மும்பை மற்றும் சென்னை மட்டும் இணைந்து 81% பங்கை வகிக்கின்றன.
சென்னையில் டேட்டா சென்டர் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தேவை 2024-ல் 67 MWல் இருந்து 2026-ல் 103 MW ஆக அதிகரிக்கும்.
சென்னையில் தற்போது 88 MW திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் உள்ளன. 2024-26 காலகட்டத்தில் 4.4 மில்லியன் சதுர அடியில் 224 MW திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பின் 2027-28 ஆம் ஆண்டுகளிலும் கூடுதலாக 100 MW அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டேட்டா சென்டர் துறையில் 2026-க்குள் $5.6 பில்லியன் டாலர் முதலீடுகள் இந்தியாவிற்குள் வரவுள்ளன. அதில், நாட்டின் இரண்டாவது உயர்ந்த அளவாக 27% சதவீதம் முதலீடு சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என JLL நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.