சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் சமீபத்தில் 147 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ கண்டுபிடிப்புகளால் வியப்படைந்துள்ளனர்.
சின்சுவான் படுகையில் சாங்கிங் மாவட்டத்தில்1998-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) இதழில் வெளியிட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது,92 அடி நீளமுள்ள பெரிய ஹெர்பிவோர் வகையைச் சேர்ந்தது என்றும் இது ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ‘டோங்னான்லாங் ஜிமிங்கி’ (Tongnanlong zhimingi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.மேலும், இதன் நீளம் 23 மீட்டரில் இருந்து 28 மீட்டர் வரை இருந்திருக்கலாம் எனவும், இது மிக நீண்ட கழுத்துடைய டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இதன் கண்டுபிடிப்பு டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய தகவல்களை அளிக்க ஏதுவாக அமைகிறது.
பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று :
இதன் எலும்புக்கூடு, குறிப்பாக அதன் தோள்பட்டை எலும்பு, இந்த குடும்பத்தில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் குடும்பத்தில் உள்ள மற்ற பெரிய டைனோசர்கள் எவ்வாறு பரிணாமம் அடைந்தன, பரவியது என்பது குறித்த புதிய தடயங்களை இந்த டைனோசர் படிவங்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ஏன் வியப்படைகிறார்கள்:
இந்த புதைபடிவங்கள் பரிணாம இடைவெளிகளைக் குறைக்கின்றன. மேலும், டைனோசர்களிடமிருந்து பறவை போன்ற அம்சங்கள் எவ்வாறு உருவாகின என்பதைக் காட்டுகின்றன. இதன் எலும்புக்கூடு, குறிப்பாக அதன் தோள்பட்டை எலும்பு, இந்த குடும்பத்தில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரியது.நவீனப் பறவைகளில் காணப்படுவது போல, இந்த காற்று நிரப்பப்பட்ட எலும்புகள் உடலின் எடையைக் குறைத்து, ராட்சத உடலைத் தாங்க உதவியதாகவும், திறமையான சுவாச அமைப்புகள் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், கிழக்கு ஆசிய டைனோசர்கள் கடல் மட்டம் உயர்வால் பிற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன என்றொரு கோட்பாடு இருந்தது. டாங்னான்லாங் டைனோசர் (Dinosaur), தான்சானியாவில் காணப்படும் சௌரோபோடு சில அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறது. அதாவது, ஜுராசிக் காலத்தில் நிலப்பரப்புப் பாதைகள் திறந்தே இருந்திருக்கலாம் என்றும் மாமென்சிசாரிட் குழு உலகளவில் பரவியிருந்தது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.
