பத்து ஆண்டுகள் ஆன பின்னரும் கூட எந்த பலனும் இல்லை என்று தெரிந்தும் கங்கை தூய்மை திட்டத்திற்கு மீண்டும் மீண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிநிலையில் நிதி ஒதுக்கீடு செய்வது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணமாகத் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு தோல்வி திட்டம் என்று தெரிந்தும் ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களைக் கங்கையில் வாரி இறைப்பது ஏன்? என்று தமிழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
1986ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திதான் கங்கை தூய்மை திட்டத்தைக் கொண்டு வந்தார். 1986 தொடங்கி 2000 ஆண்டு வரைக்கும் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் கூட எந்த பலனையும் தராததால் இது தோல்வி திட்டம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
2024ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தைத் தூசி தட்டி எடுத்தார் பிரதமர் மோடி. அப்போதே இந்த திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
20 கோடி ரூபாய் செலவும் செய்தும் எந்த பலனும் இல்லை தெரிந்தும் 2023ல் மேலும் 22,500 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு 3,345.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி நிலையில் 2,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த முறை நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் கங்கை தூய்மை அடையாததால் உண்மையிலேயே கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காகத்தான் இந்த நிதிகள் செலவிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.