தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே கூல் லிப் போதை பொருள் விற்போரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜாமீன் கோரி இவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணையில், மாணவர்களிடையே பெருகும் வன்முறைக்கு கூல் லிப் மாதிரியான போதைப்பொருட்களே காரணமாக இருக்கிறது. இதற்கு மற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்பது வேதனையான ஒன்று. இந்த போதைப்பொருள் பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று அறிவித்து நாடு முழுவதும் தடை செய்யக்கூடாது? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
கூல் லிப் போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவாக ஏன் அறிவிக்கக்கூடாது? என கேள்வி எழுந்த விவகாரத்தில், கூல் லிப் தயாரிப்புகளில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
இன்று நடந்த விசாரணையில், கூல் லிப் மாதிரி வேறு வகையான போதைப்பொருட்கள் உள்ளன. சிரப்’களை போதை பொருட்களாக பயன்படுத்துவது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன என்று குட்கா நிறுவனம் தரப்பு வாதிட்டது.
மேலும், கூல் லிப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளஹ்டு. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றும் குட்கா தரப்பு வாதிட்டது.
அப்போது, குட்கா தயாரிப்புகள் மீது Tabacco users die younger’ என்ற வாசகம் உள்ளது. இந்த ‘புகையிலை பயன்படுத்துவோர் இளமையில் இறக்கிறார்கள்’ என்ற வாசகம் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
’இறக்கும் வரை இளமையாக இருக்கலாம் ’ என்று தவறாக புரிந்துகொண்டால் அது விளம்பரம் போல் ஆகிவிடும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அதனால், போதைப்பொருள் பயன்பாட்டினை குறைக்க வேறு எப்படி எச்சரிக்கை வழங்கலாம்? என மத்திய அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் மறு விசாரணை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.