“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
என்ற குறளுக்குரிய பொருளான
நுண்பொருள் காண்ப தறிவு”
“நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்” என்பதை நினைவூட்டி இந்த கட்டுரையை தொடங்குவதே பொருத்தமாக இருக்கும்.
ஏனென்றால் இந்த கட்டுரையின் நாயகனுக்கும், தனக்கு தெரிந்ததை பிறர்க்கு எளிதான முறையில் கூறுவதும், தன் துறையில் தான் லெஜண்டாக இருந்தாலும் தொடர்ந்து புதுப்புது நுணுங்கங்களை கற்றுக்கொண்டே இருப்பதும் மிகவும் பிடிக்கும்.
கிரிக்கெட் ரசிகர்களுக்குதான் தெரியும் டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளில் ஒரு வீரர் விளையாடுவது எவ்வளவு பெரிய சாதனை என்று. அத்தகைய சாதனை தான் நம் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் அஸ்வின் படைத்துள்ளார். கடினமிகுந்த டெஸ்ட் போட்டிகளில் மாரத்தான் தொடராக பல ஓவர்கள் பந்து வீசி, நூறு போட்டிகள் என்ற இலக்கை எட்டுவது அவ்வளவு ஈசி அல்ல . அவருக்கான ஒரு சிறு வாழ்த்து தான் இந்த கட்டுரை .
டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் ? என்று கேட்பவர்களான பதில் இது…
கிரிக்கெட்டின் ஒரிஜினல் வடிவம் டெஸ்ட் கிரிக்கெட் தான். 5 நாட்கள் விளையாடப்படும் போட்டியில் அது வீரர்களின் விளையாட்டு ஆற்றலை மட்டுமல்லாது அவர்களின் உடல் ஆற்றல், பொறுமை ,போராட்டக்குணம் , மனோதிடம், மீள்திறன் (resilience) போன்றவற்றை சோதிப்பதினால் அது ‘டெஸ்ட்’ என்று பெயர் பெற்றது. அத்தகைய டெஸ்ட் போட்டிகளில் தன் நூறாவது போட்டியில் விளையாடி சாதனை படைத்து இருக்கிறார் ஆசிரியர் அஸ்வின்..
அது என்ன ஆசிரியர் ஆஸ்ஸ்..??
தனக்கு தெரிந்த தகவல்களை யூடியூப் வாயிலாகவும், மேலும் ஆடுகளத்தில் அணிக்கு இக்கட்டான சூழல் ஏற்படும்போது அதனை அவர் அணுகும் முறை வழியாகவும் நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுகிறார் நம்ம ஆஸ்ஸ்…
இத்தகைய பாடங்கள் நமக்கு சொல்லி கொடுக்கும் பார்மூலாக்கள் கிரிக்கெட் களம் என்ற சிறு வட்டத்துக்குள் மட்டும் சுருங்காமல் பல்வேறு துறைகளுக்கும் நவீன கார்ப்பரேட் கலாச்சாரத்துக்கும் பொருந்தி போகும் . “அஸ்வின் 500 விக்கெட்க்கு மேல் எடுத்துள்ளார் , அதிகமுறை 5விக்கெட்களை சாய்த்துள்ளார் , சுழற்பத்து வீச்சாளராக இருந்தும் டெஸ்டில் 5 சதம் அடித்துள்ளார்” போன்ற சாதனைகளை அலசுவதை விட அஸ்வின் கற்றுக்கொடுத்துள்ள பாடங்களில் இருக்கும் பார்மூலாக்கள் என்ன ? நம் ப்ரோஷனல் வாழ்க்கையுடன் அது எப்படி பொருந்தி போகிறது என்பதை அலசி பார்ப்பதே அஸ்வினுக்கு நாம் அளிக்கும் சிறந்த வாழ்த்தாக இருக்கும்.
Adaptability – மாற்றம் தழுவல்
நாம் செய்யும் வேலை முறையிலோ அலுவலகத்திலோ மாற்றம் நிகழும்போது அதற்கு தகுந்தாற்போல நமது skillsets ஐ அப்டேட் செய்யவில்லை என்றால் நாம் அவுட்டேட் ஆகிவிடுவோம் . தொழிலில் கொடிகட்டிப் பறந்த பலரும் தங்கள் தொழிலை அப்டேட் செய்யாமல் கால ஓட்டத்தில் கரைந்துள்ளனர். அஸ்வின் ப்ரோபஷனல் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலகட்டத்தில் ஓப்பனிங் பேட்டராக தான் இருந்தார் . அப்போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட இரத்தகட்டின் காரணமாக சர்ஜரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . அவ்வாறு சர்ஜரி
செய்தால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிடும். அதனால் அதற்கு மாற்றாக இரண்டு மூன்று மாதம் முழு பெட் ரெஸ்ட் எடுத்து சர்ஜரி ஆபத்திலிருந்து தப்பித்தார். அதிலிருந்து மீண்டு வந்ததும் மற்றொரு அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது. அணியில் அவர் விளையாடிய ஓப்பனிங் போசிஷன், இன்னொரு விரரால் ரீபேலஸ் செய்யப்பட்டு இருந்தது. மேலும் உடல்நிலையின் காரணமாக முன்பு போல மித வேகப்பந்து வீசவும் முடியவில்லை.
இப்படிபட்ட சூழ்நிலையிலும் அஸ்வின் துவண்டு போய் கிரிக்கெட்டை விட்டுவிடவில்லை . தனது தொடர்பயிற்சியால் தன் skillsetஐ மாற்றி தன்னை ஒரு ஆப் ஸ்பின்னராக உருமாற்றி சாதிக்க தொடங்கினார் . இப்போதும்கூட ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் தன் பவுலிங்கை ஒரு கலை என கருதி அதன் நுணுக்கங்களை மெருகேற்றி கேரம் பால், டாப் ஸ்பின், ஆப் கட்டர், சைட் ஸ்பின், பவுலிங்கில் வேரியேசன் காண்பித்து கொண்டே இருக்கிறார். அனைத்திலும் உச்சமாக பங்களாதேஷ் க்கு எதிரான ஒரு போட்டியில் ஷேன் வார்னே பாணியில் லெக் ஸ்பின் பந்துக்கூட வீசினார்!!!
2023ல் இந்தியாவுக்கு டூர் வந்த ஆஸ்திரேலியா அஸ்வின் மாதரியே பவுலிங் ஆக்சன் உள்ள நெட் பவுலரை கொண்டு பயிற்சி எடுத்தது. ஆனாலும் அந்த தொடரில் தன் சுழல்வித்தையால் 25 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகனாக ஜொலித்தார். டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால் இப்போது எதிரணியர் வீடியோ அனலிஸ்ட்டை வைத்து பவுலர்களின் ஆக் ஷனை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் புது புது நுணுக்கங்களை கண்டறிந்து அவர்களை விட அட்வான்ஸாக இருக்கும்படி தயாராகுவார் அஸ்வின். எந்த துறையிலும் நாம் வளர இது போன்ற அப்ஸ்கில்லிங்(upskilling) செய்து மாற்றத்துக்கு தக்கவாறு நம்மை Adapt செய்துகொள்ளுவது மிகவும் அவசியமாகிவிட்டது.
Stick to Basics_அடிப்படையில் கவனம் செலுத்தல்
நாம் செய்யும் தொழிலிலோ, வேலையிலோ, நாம் நினைந்த இலக்கை அடையாமல் போகும்போதும் , நம் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்காத போதும் நாம் சோர்ந்துவிடுவோம் அதிலிருந்து மீண்டு வர வல்லுநர்கள் சொல்லும் ஒரு அறிவுரை stick to basics . அப்படி செய்வது நம்மை உளவியல் ரீதியாக சோர்வடைய செய்யாமல் இருக்க உதவும். மேலும் இப்படி ஆகிவிட்டதே!! அப்படி ஆகிவிட்டதே!! என்று நெக்டிவ் வைப்ஸ்க்குள் சிக்காமல் , இப்படி செய்யலாமே? அப்படி ட்ரை பண்ணி பார்க்கலாமே? என்ற பாசிடிவ் சிந்தனையையும் புது புது ஐடியாக்களை நமக்குள் விதைக்க உதவும்.
அஸ்வினும் பல்வேறு சூழ்நிலையில் இதனை பின்பற்றி இருக்கிறார். உதாரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் WTC (World Test Championship) பைனல் நடைபெற்றது. அந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு செல்ல அஸ்வின் முக்கிய பங்காற்றினார். அப்போது அஸ்வின் தான் உலகின் நம்பர் ஓன் டெஸ்ட் பவுலர். இருந்தாலும் ஒரு ஸ்பின்னர் / மூன்று வேகப்பந்து வீச்சாளர் என்ற அணியின் இக்குவேசன் காரணமாக அஸ்வினால் ப்ளேயிங் 11 இடம்பெற முடியவில்லை. அப்போதும் அவர் கசுடுகளால் சோர்ந்துவிடவில்லை. பைனல் நடக்கும் போது எப்போதேல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வாட்டர் பாய்யாக களத்திற்கு சென்று டீம் டிஸ்கஸன்களின் கலந்துகொண்டு தன் ஆலோசனைகளை பகிர்ந்துகொணடார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. “நான் உலகின் நம்பர் பவுலர் , இந்த WTC தொடரின் அணியின் லீடிங் வீக்கெட் டேக்கர். எனக்கு டீமில் இடமில்லையா?” என்றெல்லாம் விரக்தியடையாமல் தன்னால் இயன்ற பங்களிப்பை அணிக்காக செய்தார்.
போட்டி முடிந்ததும் தன் வீட்டுக்கு கூட திரும்பாமல் இங்கிலாந்திலிருந்து நேரடியாக கோவை வந்திறங்கி திண்டுக்கல் சென்று, உள்ளூர் போட்டி என்று கருதாமல் TNPL போட்டிகளில் பங்குபெற்று விளையாடி தன் எண்ணம் முழுவதும் கிரிக்கெட்டை சுற்றியே இருக்குமாறு பார்த்துகொண்டார். நமக்கும் நம் அலுவலகத்தில் நாம் எதிர்பார்த்த ஊக்கமும் உயர்வும் கிடைக்காதபோது விரக்தியடையாமல் நமது வேலையை இன்னும் செம்மைப்படுத்திக்கொண்டால் நமது கேரியருடன் சேர்ந்து நம் பர்சனாலிடியும் உயரும்
Adhering to the laws_நெறிமுறை பேணல்
அஸ்வின் என்றதும் நினைவுக்கு வரும் விசயங்களில் ஒன்று மான்கட் (Mankad) விக்கெட்.
பந்துவீச தொடங்கும்போது நான்~ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் இருக்கும் பேட்டர் க்ரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் ஆவுட் செய்து ஆவுட் ஆக்குவது மான்கட் என்றழைக்கப்படுகிறது. மான்கட் முறையை பலரும் தவறான விசயமாக கருதி, இது ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டுக்கு (Spirit of cricket)எதிரானது என்றெல்லாம் வாதிடுகிறார்கள். ஒரு ஷாட்டை அடிக்க க்ரீஸிலிருந்து பேட்டர் இறங்கி வந்து ஆடும்போது பந்து மிஸ் ஆகி கீப்பரிடம் சென்றால் அவர் ஸ்டம்பீங் செய்து பேட்டரை அவுட் செய்வார் . அப்போது கீப்பரிடம் சென்று அந்த பேட்டர் வேண்டுமென்றே பந்தை மிஸ் செய்யவில்லை , ஷாட் அடிக்க முயலும்போது மிஸ் செய்துவிட்டார். அதனால் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டுக்கு மதிப்பளித்து அந்த பேட்டரை மறுபடியும் விளையாட செய்யுங்கள் என்று சொல்வது எப்படி அபத்தமோ அதே போன்றதுத்தான் மான்கட் முறையில் அவுட்டாக்கும்போது அப்படி அவுட் செய்வது சரியான முறை கிடையாது என கூறுவதும் .
அஸ்வின் மான்கட் செய்யும்போது கிரிக்கெட் நிபுணர்களால் அதிகமாக விமர்சிக்கபட்டார் . சோசியல் மீடியா முழுவதும் ட்ரோல் செய்யப்பட்டார். ஆனாலும் அஸ்வின் தன் நிலைப்பாட்டை மாற்றிகொள்ளவில்லை . ஏனென்றால் “லா ஆப் கிரிக்கெட்” (Law of cricket)என்ன சொல்கிறோதோ அதையே அவர் பின்பற்றினார் . பிறகு ஏன் அவர் பிறரின் வசைக்கு பயந்து தன் திசையை மாற்ற வேண்டும்? நாமும் நம் கேங்கிலோ டீம்யிலோ விவாதம் நடக்கும்போது ஒரு விசயத்தில் பெரும்பாலானோர் கூற்று தவறாக இருந்தாலும் herd மென்டாலிட்டிக்கு உட்பட்டு , பிறரின் கேலி,கிண்டலுக்கு பயந்து, நமக்கு ஏன் வம்பு ? என தலையாட்டி சென்றுவிடுவோம். அப்படி செய்யாமல்,🎂 நமக்கு எதிரே பெருங்கூட்டமே இருந்தாலும் நீதிக்கு உட்பட்டு இருப்பதே அறம்.
Never stop learning – கற்க கற்க
2022 ஆம் ஆண்டு மிர்புரில் பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 147 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 74 ரன்னுக்கு 7 விக்கெட்களை இழந்தது. அடுத்து ஷ்ரேஸ் ஐயருடன் இணைந்த அஸ்வின் இந்தியாவை வெற்றிபெற செய்து இரண்டாவது இன்னிங்ஸின் டாப் ஸ்கோரர் ஆகி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் .மற்ற பேட்டர்கள் கஷ்டப்பட்ட ஆடுகளத்தில் அவர் எப்படி தாக்குபிடித்தார் என கேட்டபோது , இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியபோதே பந்து பிட்ச் ஆனாவுடன் லோ பவுன்ஸ் ஆகிறது என்பதை உணர்ந்தாகவும் அதற்கேற்ப முந்தினநாள் மாலையிலிருந்தே லோ பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ளும் வகையில் தன் உடம்பை நன்றாக குனித்து லோ பவுன்ஸ் பந்துக்களை வீச செய்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு,போட்டிக்கு தயாரானதாகவும் கூறினார். இப்படி கற்றலை தன் தினசரி வழக்கமாக கொண்டுள்ளார் அஸ்வின். நம் ப்ரோபஷனல் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயர்த்தை அடைந்தாலும் கற்பதை நிறுத்தவே கூடாது. வெற்றியோ , தோல்வியோ அதிலிருந்து நாம் என்ன கற்கலாம் என்ற நோக்கத்திலேயே தான் அணுகவேண்டும். கற்றல் இல்லாமல் மேம்பாடும் இருக்காது
Stay focused_கவனம் சிதறேல்
2020-21 இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் 36 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆகி படுதோல்வியை தழுவியது. விராட் விடுப்பில் செல்ல, பல முக்கியமான வீரர்கள் காயமடைய இளம் வீரர்களை கொண்டு மற்ற போட்டிகளில் விளையாடியது. மெல்போர்ன் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றிபெற்று சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட்க்கு சென்றது .
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா போட்டியை வெல்ல இந்தியாவுக்கு 407 ரன்களை இலக்காக செட் செய்தது. நான்காவது இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா டெஸ்டின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளைக்கு பிறகு 5 விக்கெட் இழந்து இருந்த நிலையில் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார். ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் அஸ்வினுக்கு பிறகு மிஞ்சி இருந்தது பின்வரிசை பேட்டர்களே. அதனால் அஸ்வின் மிக கவனத்துடன் விளையாட ஆரம்பித்தார். அந்த போட்டியின் போது அஸ்வின் முதுகு வலியால் பாதிக்கபட்டிருந்தார். முதுகு வலியுடன் எஞ்சி இருந்த முப்பது ஓவர்களை விக்கெட் விழாமல் ட்ரா செய்துவிட வேண்டும் நோக்கில் விகாரியுடன் பார்ட்னர்ஷிப் அமைந்து விளையாயடினார்.
ஜடேஜாவும் விளையாட முடியாது இந்த பார்டனர்ஷிப்பை உடைத்துவிட்டால் தாங்கள் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியா தங்களின் முழுதிறனையும் களத்தில் காட்டிக்கொண்டு இருந்தனர்.. பவுலர்கள் பவுன்சரை கொண்டு அஸ்வினையும் விகாரியை தாங்கினார்கள் கீப்பரும் பீல்டர்களும் ஸ்லட்ஜிங்(Sledging) செய்து அவர்களின் கவனத்தை சிதைக்க முயற்சித்தனர்.. அஸ்வினும் தன் கவனத்தை இழக்காமல் தான் கொண்ட இலக்கை அடைந்தார். அந்த ட்ராதான் இந்தியா தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தது. இல்லாவிட்டால் அந்த தொடர் சமனில் முடிந்திருக்கும். சில ட்ராக்கள் வெற்றிக்கு ஒப்பானது என்பார்கள். அப்படிபட்ட ட்ரா தான் அது. நம்மை சுற்றி யார் என்ன சொன்னாலும் , செய்தாலும் நம் இலக்கில் மட்டும் கவன செலுத்தினால் இமயமும் இம்மிதான்.
Presence of mind_சமயோஜித சிந்தனை
அஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலககோப்பை லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 160 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயம் செய்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 31 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து பின்னடைவை சந்திந்திருந்தபோது கோலி~பாண்டியா இணை அணியை சரிவிலிருந்து மீட்டு வந்தது. கடைசி இரண்டு ஓவரில் 31 தேவைப்பட , ஹரிஸ் ரவுப் பந்தில் விராட் கோலி, ‘ஷாட் அப் தி சென்சூரி’ என்று வர்ணிக்கப்படும் ஷாட் உட்பட 2 சிக்சர்களை விளாசி இலக்கை நெருக்கமாக்கினார். அந்நிலையில் மேலும் இரண்டு விக்கெட் விழ கடைசி பந்தில் இந்தியா வெற்றிபெற இரண்டு ரன் தேவை . அப்போது அஸ்வின் களம் இறங்கினார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமே ஆர்ப்பரித்திருந்தது. இரு அணி வீரர்களும் உட்சகட்ட பிரஷரில் இருந்தனர் எதிர்முனையில் இருந்த விராட்கோலி அஸ்வினுக்கு இந்த ஷாட் அடி , அந்த ஷாட் அடி என்று அட்வைஸ்களை வழங்கினார்.
அந்நிலையில் யாராக இருந்தாலும் பாலை தட்டிவிட்டு ரன் எடுத்து விட வேண்டும் என்பதே மட்டுமே இலக்காக இருக்கும். அந்த பாலில் ரன் எடுக்க தவறிவிட்டால் ஒட்டுமொத்த தேசமும் சபிக்கும் என்பது அஸ்வினுக்கும் தெரியும் . நவாஸ் வீசிய கடைசி பந்து லெக் ஸ்டம்ப் லைன் பிட்ச் ஆனதை பார்த்த அஸ்வின் இது லெக்சைடில் வைட் ஆகும் என்று கணித்து அதனை ஆட முற்படாமல் ஸ்டம்ப் லைன்க்குள் தன் உடம்பை வைத்துக்கொண்டார். அந்த பந்து வைட் ஆகி ஒரு எக்ஸ்ட்ரா கிடைத்தது. மறுபடியும் வீசப்பட்ட பந்தை மிட் ஆப் திசையில் தூக்கியடித்து வெற்றிக்கான ரன்களை எடுத்தார். எந்தவொரு இக்கட்டான சூழலிலும் பிரஷரை மண்டைக்குள் கொண்டு செல்லாமல் தெளிவாக சிந்தித்து செயல்படுவதை தான் presence of mind என்று கூறுகிறார்கள்.
போட்டி தேர்வுகளில் குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும்போது தேர்வு எழுதுபவர்கள் பதட்டத்தில் நன்கு தெரிந்த கேள்விக்கு தவறான பதிலளிப்பார்கள். அத்தகைய தவறகளை செய்யாமல் இருக்க நம்முடைய presence of mind மற்றும் வொர்க்கிங் ஆண்டர் பிரஷர் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
இப்படி எவ்வளோ பார்மூலாக்களை தன் ஆட்டத்தின் மூலம் அஸ்வின் கற்றுகொடுத்துள்ளார். இப்போது நாம் அலசாமல் விட்ட இன்னும் பல பார்மூலாக்களை அஸ்வின் 600, 700 விக்கெட்களை வீழ்த்தும்போது வாழ்த்துவதற்கு ஸ்டாக் வைப்போம்.. ஆல் தி பெஸ்ட் ஆஸ்ஸ்…
ஆசிரியர் ஆஸ்ஸ்…
Author: முகமது நிசாரூல் ஹக்