ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல், 2012-ம் ஆண்டு முதல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ICC உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில், அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை செய்தார்.
2022-ம் ஆண்டு கால்முறிவு காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்த மேக்ஸ்வெல், கடந்த ஆண்டு போட்டிகளின் பொது தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார்.
ஆனாலும், உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், இறுதி போட்டியில் ஆஸ்ட்ரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்ட்ரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் க்ளென் மேக்ஸ்வெல் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளார்.
பிறகு முன்னாள் அவுஸ்ரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் ‘Siix and out’ எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்ட்ரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.