நடப்பு ஐபிஎல் சீசனை (IPL 2026 ) முன்னிட்டு, முக்கியமான வீரர் மாற்றத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ரவீந்திர ஜடேஜா – இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்
- சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அனுபவம் மிக்க ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), அடுத்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
- மொத்தமாக இவர் 250+ போட்டிகளில் விளையாடியுள்ளார்; அதில் இதுவரை 12 சீசன்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். ஜடேஜாவின் பரிமாற்றம் இதுவரை நடந்த மிகப்பெரிய டிரேட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது ஆனால் லீக் கட்டணம் ரூ. 18 கோடியிலிருந்து ரூ.14 கோடியாக இப்போது 4 கோடி குறைவாக வாங்கப்பட்டுள்ளார்.
- ஜடேஜா முன்பு RR அணிக்காக விளையாடிய அனுபவமும் உள்ளது; அதனால் இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சன் – சிஎஸ்கே-யில் புதிய அத்தியாயம் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன்(SanjuSamson), வரவிருக்கும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரது தற்போதைய லீக் கட்டணம் ரூ.18 கோடி தொடரும் இவர் இதுவரை 177 IPL போட்டிகள் விளையாடியுள்ளார்.
- சிஎஸ்கே, அவரது மூன்றாவது ஐபிஎல் அணி 2013-ல் IPL அறிமுகமானதிலிருந்து, சஞ்சு சாம்சன் RR அணியின் முக்கிய வீரராக விளங்கி வருகிறார்.
- 2016 மற்றும் 2017 சீசன்களில் மட்டும் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.
- CSK அணியின் புதிய தலைமைக்கட்டமைப்பில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு வகிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பரிமாற்றத்தின் முக்கியத்துவம் இந்த IPL Trade இரு அணிகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: சிஎஸ்கே அணிக்கு வலிமையான விக்கெட் கீப்பர்-பேட்டர் கிடைத்துள்ளார் RR அணியில் உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் சேர்ந்துள்ளார்.
இரண்டு அணிகளின் கோர் ஸ்ட்ராட்டஜிகளும் புதிதாக அமைக்கப்பட உள்ளது இரு வீரர்களின் புதிய அணிசேர்க்கையும், அடுத்த சீசனில் அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அம்சமாக உள்ளது.
