இணையத்தில் பல நல்ல பக்கங்கள் இருப்பவை போலவே தீய பக்கங்களும் உண்டு. சுற்றும் முற்றும் பார்க்காமல் சாலையின் குறுக்கே ஓடுவது ஆபத்தானது. அது போலவே கவனக்குறைவாக இணையத்தில் உலா வருவதும் மிகவும் ஆபத்தானது.
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, AI, இலக்கவியல் உருமாற்றம் என அதீத வேகத்துடன் உலகம் பயணித்து வந்தாலும், அதனூடாகவே இணைய பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் சவால்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆகையால் இணைய பாதுகாப்பு சார்ந்த படிப்புகள் பற்றியும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சைபர் செக்யூரிட்டி சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளதால், இந்த படிப்புகளை பற்றிய விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.
பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு, மேற்படிப்பாக படிக்கும் வகையில் பல்வேறு சைபர் செக்யூரிட்டி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஏற்ற சில சைபர் செக்யூரிட்டி படிப்புகள்:
- B.Sc Forensic Computing and Security
- B.Sc Digital Security and Forensics
- B.C.A (Hons) in Cyber Security
- B.C.A .with Microsoft Cloud Computing and Cyber Security
- B.Tech Cyber Security
- B.Tech.CSC Cyber Security)
- B.SC Cyber Security)
- B.Sc Cyber Security and Forensic (Honours)
- B.B.A Cyber Security
- B.Com Cyber Crimes and Laws
- B.Com in Forensic Accounting
- B.Com in Fraud Detection
- B.Sc Degital Security (Hons)
- B.Sc Computer Forensic (Hons)
- B.Sc Cyber Security Network (Hons)
மேற்குறிப்பிடப்பட்ட சைபர் செக்யூரிட்டி படிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 50 கல்வி நிறுவனங்களில் சைபர் செக்யூரிட்டி சார்ந்த பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் இலவசமாக பல்வேறு சைபர் செக்யூரிட்டி படிப்புகளை படிப்பதற்கும் அருமையான வாய்ப்புகள் இருக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களும் சைபர் செக்யூரிட்டி துறையில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் இலவச படிப்புகளை படிக்கலாம்.
- Introduction to Cybersecurity – Cisco Network Academy(Click here)
- Introduction to Cyber Attacks – Coursera(Click here)
- Network Security – UDACITY(Click here)
- Staying Safe Online – Udemy(Click here)
- Ethical Hacking Essentials – EC Council(Click here)
- Vulnerability Management – Qualys(Click here)
- Certified in Cybersecurity (Entry Level) – ISC2(Click here)
- Google Cybersecurity Professional Certificate – Coursera(Click here)
- Cybersecurity Free learning and resources – IBM(Click here)