
தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நடைபெற்ற டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விபரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2017ம் ஆண்டு 2 வழக்குகளும், 2018ம் ஆண்டு 6 வழக்குகளும், 2019ம் ஆண்டு 9 வழக்குகளும், 2020ம் ஆண்டு 15 வழக்குகளும், 2021ம் ஆண்டு 8 வழக்குகளும், 2022ம் ஆண்டு 1 வழக்கும் என மொத்தம் 41 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது!
மேலும், இந்த 41 புகார்களிலும் மொத்தமாக சேர்த்து கணக்கில் வராத 98 இலட்சத்து 85 ஆயிரத்து 14 ரூபாய்க்கு அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது.
அண்மையில் நடத்திய சோதனைகளில் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்தறை தெரிவித்த நிலையில்,
அது தொடர்பான விபரங்கள் எங்கே என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது!
டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனமாகும், தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா? என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது