இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ள நிலையில், அணியின் நிர்வாகம் புதிய கேப்டனை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
IPL 2024 சீசன் போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் சூழலில், CSK அணியில் தோனியின் எதிர்காலம் பற்றிய விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த இரண்டு சீசன்களின் போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி மீண்டும் வழிநடுத்துவாரா? என்கிற விவாதங்கள் எழுப்பப்பட்டு வந்ததன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தாண்டும் தோனி தொடர்ந்து விளையாட உள்ள நிலையில், இந்த சீசன் முடிந்ததும் அவர் விலகத் திட்டமிடுவாரா? என்ற கேள்வியும் எழும்பத் தொடங்கியுள்ளது.
இந்த சூழலில், CSK அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், அணியின் அடுத்த கேப்டன் குறித்த பேச்சுக்கள் நடைபெற்று வருவதை உறுபடுத்தியுள்ளார்.
கடந்த 2022 IPL சீசனில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா CSK அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் முடிவதற்குள் தனது கேப்டன் பதவியை மீண்டும் தோனிக்கே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
CSK அணியின் கேப்டன் பதவி குறித்துப் பேசிய அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன், “அடுத்த கேப்டன் குறித்த பேச்சுகள் நடப்பது உண்மைதான்; ஆனால், கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றிப் இப்போது பேச வேண்டாம். அது குறித்து அணியின் பயிற்சியாளர் மற்றும் தற்போதைய கேப்டனின் முடிவுக்கு விட்டுவிடுவோம், அவர்கள் தங்களின் முடிவை தெரிவிக்கட்டும், அதுவரை அனைவரும் அமைதிகாப்போம்”, என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளதாக என்று அதிகாரப்பூர்வாக அறவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.