ஒரு பிராமணராக இருந்தும் மாட்டிறைச்சி சாப்பிட்டார் சாவர்க்கர். பசுவதைக்கு எதிரானவராக இருந்தார் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமைச்சர் தினேஷ் குண்டுராவ்.
காந்தியையும் சாவர்க்கரையும் ஒப்பிட்டு பேசி இருக்கும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேச்சு பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
‘’இந்து கலாச்சாரத்தின் பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி. அதனால்தான் அவர் சைவை உணவுகளையே உண்டார். தனது அணுகுமுறையிலும் அவர் ஜனநாயகவாதியாக இருந்தார்.
மகாத்மா காந்தியின் கருத்துகளுடன் முரண்படுகிறது சாவர்க்கரின் சித்தாந்தம். அடிப்படை வாதம் பக்கம் சாய்ந்தது. காந்தியோ ஆழ்ந்த ஜனநாயகத்தின் மீது நம்பிகை கொண்டிருந்தார்.
சாவர்க்கர் ஒரு பிராமணர்தான். ஆனால் அவர் அசைவை உணவுகளை உண்டார். மாட்டிறைச்சி சாப்பிட்டார். அதுமட்டுமல்ல, இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக ஊக்குவித்தார். அவர் பசுவதையை எதிர்க்கவில்லை’’ என்று பேசி இருக்கிறார்.
அமைச்சரின் இந்த பேச்சு வைரலாகி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.