சென்னை அடையாறில் உள்ள இயக்குநர் நெல்சன் வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றதாகவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் மொட்டை கிருஷ்ணன் குறித்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் என்றும் வெளியான செய்தியை நெல்சன் மறுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சம்போன் செந்திலையும், மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க தேடி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில்தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்கிறது போலீஸ் வட்டாரம். அதனால் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அவர் தப்பியோடி தாய்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக தகவல் பரவுகிறது.
சம்போ செந்திலுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன். இவரு செந்திலுடன் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. துபாய்க்கு தப்பிசென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் தப்பியோடும் சமயத்தில் அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா. பல லட்சங்கள் செந்திலுக்கு அந்த சமத்தில் பண பரிமாற்றமும் செய்துள்ளார் மோனிஷா.
இதனால் போலீசார் இவரை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதில் செந்திலும் மோனிஷாவும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள இயக்குநர் நெல்சன் வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றதாகவும், நெல்சனிடமும் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இயக்குநர் நெல்சன் இதை மறுத்துள்ளார். போலீசார் தன்னிடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.