
தீபாவளி பண்டிகை (Diwali) ஒளி இருளை வெல்வதையும், நன்மை தீமையை வெல்வதையும் குறிக்கும் முக்கியமான திருநாளாக இந்தியாவில் அனைத்து மத மக்களாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை திதியில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்ததை நினைவுகூர்வது என புராணங்கள் கூறுகின்றன.

2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எண்ணெய் குளியல், புதிய உடை, தீபம் ஏற்றுதல், இனிப்பு வழங்குதல், பட்டாசு வெடித்தல், குடும்பத்துடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சியுடன் நாள் முழுவதும் பண்டிகை ஆனந்தம் காணப்படும்.
ஆனால், இந்த மகிழ்ச்சியின் நடுவில் சில விஷயங்களில் கவனக்குறைவு ஏற்பட்டால் பெரிய விபத்துகளுக்கும், துரதிர்ஷ்டத்திற்கும் வழிவகுக்கும். எனவே, தீபாவளி நாளில் சில தவறுகளை மறந்தும் கூட செய்யக்கூடாது. இப்போது, அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்:

- தீக்காயம் ஏற்பட்டால் பல் பேஸ்ட், மஞ்சள் போன்ற வீட்டு வைத்தியங்களை தவிர்க்கவும்
தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது சிலர் தீக்காயமடைவது சாதாரணம். ஆனால், பலர் அதற்குப் பதிலாக உடனடியாக பல் துலக்கும் பேஸ்ட் அல்லது மஞ்சள் போன்ற பொருட்களை காயத்தின் மீது தடவுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இப்படி செய்வதால் காயம் ஆழமாகி தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பல் பேஸ்டில் உள்ள இரசாயனங்கள் தோலை மேலும் சேதப்படுத்தும்.
சரியான முதலுதவி:
தீக்காயம் ஏற்பட்ட இடத்தை 5–10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் கழுவவும்.
அதன் பிறகு,தீக்காய கிரீம் அல்லது கிருமிநாசினி கிரீம் தடவவும்.
அந்த பகுதியை சுத்தமான துணியால் மூடி உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும்.

- கையில் அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்து பட்டாசு வெடிக்க வேண்டாம்
தீபாவளியின் மகிழ்ச்சியை பட்டாசுகள் இல்லாமல் கற்பனை செய்வது கடினம். ஆனால், பாதுகாப்பே முதன்மை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கையில் பட்டாசு வைத்துப் போட்டால், ஒரு விநாடியின் தவறால் கூட கடுமையான காயம் ஏற்படலாம். சிலர் கண்ணாடி பாட்டிலில் ராக்கெட்டை வைத்து வெடிக்கிறார்கள் – இது வெடிப்பு சக்தியை பலமடங்காக அதிகரித்து, உயிர்க்கே ஆபத்து தரும்.
பாதுகாப்பு வழிமுறைகள்:
பட்டாசுகளை எப்போதும் தரையில் வைத்து மட்டுமே வெடிக்க வேண்டும்.
பெரியவர்கள் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது மெழுகுவர்த்தி அல்லது தீ விளக்கு அருகில் நிற்கக் கூடாது.

- அதிக சத்தம் தரும் பட்டாசுகளை தவிர்க்கவும்
தீபாவளி மகிழ்ச்சிக்கான பண்டிகை தான், ஆனால் அதிர்ச்சி சத்தம் தரும் பட்டாசுகள் பலருக்கு துன்பம் தருகின்றன. வீடுகளில் இருக்கும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விலங்குகள் நாய், பூனை, மாடு போன்றவை சத்தத்தால் பயந்து மனஅழுத்தத்திற்கு ஆளாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் :
சத்தம் குறைந்த “Green Crackers” பயன்படுத்தவும்.
நேரம் மற்றும் இடம் கட்டுப்பாடு பின்பற்றவும்.
உங்கள் மகிழ்ச்சி மற்றவருக்கு தொல்லையாக மாறக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\

- பழைய பொருட்களை எரிப்பது, தானம் செய்வது தவிர்க்கவும்
பழைய ஆடைகள், முறம், துடைப்பம் போன்றவற்றை தீயில் எரிப்பது அல்லது தூக்கி எறிவது தவறு என நம்பப்படுகிறது. இது அதிர்ஷ்டத்தை குறைக்கும், வளத்தைத் தடுக்கிறது என்ற பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. தேவையில்லாத பொருட்களை எரிக்காமல், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது நல்லது.
- தீக்காயங்களைத் தவிர்க்க சரியான ஆடைகளை அணியுங்கள். முக்கியமாக பெண்கள் கவனமாக இருங்கள். மிகவும் தளர்வான ஆடைகள் அணிவது ஆபத்தானது; மெழுகுவர்த்தி அல்லது தீ விளக்கு அருகில் அவை எளிதில் தீப்பிடிக்கும் நைலான், செயற்கை துணி உடைகளை தவிருங்கள்.
பாதுகாப்பான ஆடைத் தேர்வு:
காட்டன் ஆடைகள் அணியவும். நீளமான ஆடைகள் அல்லது புடவை பல்லுகள் தீ அருகில் வராதவாறு கவனிக்கவும். முடிந்தால் பட்டாசு வெடிக்கும் போது ஜாக்கெட் அல்லது மெல்லிய கையுறை அணியவும்.

- வீட்டு மின் இணைப்புகளில் கவனக்குறைவு தவிர்க்கவும்
வீடுகள் முழுவதும் விளக்குகள்,String Lights கொண்டு அலங்கரிக்கப்படும். ஆனால் மின் இணைப்புகளில் கவனக்குறைவு இருந்தால் தீ விபத்து ஏற்படும்.
கவனிக்க வேண்டியவை:
பழைய மின் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
விளக்குகள் மற்றும் பிளக் பாயிண்ட் இடையில் தண்ணீர் சிதறாமல் பார்த்துக்கொள்ளவும்.
விளக்குகளை இரவு முழுவதும் எரியவிடாதீர்கள்.
- குழந்தைகள் பாதுகாப்பு – பெற்றோர் கண்காணிப்பில் மட்டுமே
குழந்தைகள் தீபாவளி நாளில் மிகுந்த உற்சாகத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோரின் பொறுப்பு.
பாதுகாப்பு குறிப்புகள்:
பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும்.
குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது தீ விளக்கு கையில் பிடிக்கக் கூடாது.
கண்ணை காக்க பாதுகாப்புக் கண்ணாடி பயன்படுத்தலாம்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு – நமது கடமை
தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியானது தான், ஆனால் அதே நேரத்தில் காற்று மாசு மற்றும் சத்த மாசு அதிகரிக்கும்.சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகள்:
குறைந்த சத்தம் தரும் Eco-friendly crackers தேர்வு செய்யவும்.
பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும்.
மரங்கள் மற்றும் செல்லப்பிராணிகள் அருகில் வெடிக்க வேண்டாம்.
தீபாவளி என்பது ஒளி, மகிழ்ச்சி, குடும்ப உறவு மற்றும் நம்பிக்கையின் பண்டிகை.
அந்த ஒளி நம் வாழ்க்கையையும், சமூகத்தையும் ஒளிரச் செய்யட்டும். ஆனால் அதற்காக பாதுகாப்பை தியாகம் செய்யக் கூடாது.
இந்த தீபாவளியில் மகிழ்ச்சியை பகிருங்கள், ஆபத்தை அல்ல. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இந்த திருநாளை கொண்டாடுங்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!