ஐபிடிஎஸ் எனும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக முதலாவது இடத்தில் உள்ளது. மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர் ஆகிறார் என்பதும் தெரியவருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் கருத்துக்கணிப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குக்தள்ளி விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார். தவெக இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் தான் வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிறார் என்கிறது ஐபிடிஎஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்.

முதலமைச்சர் ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு, ஆம் என்று 55 சதவிகிதத்தினரும், வாய்ப்பு இல்லை என்று 29 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் இந்துக்கள் 81.71 சதவிகிதத்தினரும், கிறிஸ்தவர்கள் 10.55 சதவிகிதத்தினரும், இஸ்லாமியர்கள் 7.75 சதவிகிதத்தினரும் பங்கேற்றுள்ளனர். 234 தொகுதிகளிலும் 81 ஆயிரத்து 375 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் இயங்கி வரும் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு இந்த முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
