
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கை வரும் அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்.
திருடா திருடி படத்தை அடுத்து தனுஷுடன் நண்பராகி பின்னர் அவரை காதலித்து வந்தார் ஐஸ்வர்யா. 2004ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் திடீரென்று கடந்த 2022ம் ஆண்டில் ஜனவரி மாதம் 17ம் தேதி சமூக வலைத்தளம் மூலம் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் பிரிவதாக அறிவித்தாலும் கூட விவாகரத்து செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றே அவரது குடும்ப உறுப்பினர்கள் சொல்லி வந்தனர். ஆனால், விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகாததால் வழக்கின் மறு விசாரணையை வரும் அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது மனம் மாறி இருப்பதாகவும், இருவரும் மீண்டும் இணைய இருப்பதாகவும் இவர்கள் மீண்டும் இணைய ரஜினிகாந்தும் பல்வேறு முயற்சிகள் எடுப்பதாகவும் செய்திகள் பரவி வரும் நிலையில், இருவரும் இன்று வழக்கில் ஆஜராகாமல் இருந்தது, விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்க வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.