இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், அனைத்து வாக்குகளும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த சூழலில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் உருவாக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/03/2024) காலை வெளியிட்டார்.
மாநில உரிமைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக வெளியிடப்பட்டுள்ளது.
‘திமுகவின் 50 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்’
- விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
- மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
- 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்
- ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்
- ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
- மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்
- நாடு முழுவதும் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்
- முதலமைச்சர்கள் அடங்கிய மாநில வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்படும்
- பாஜக அரசாங்கத்தால் கலைக்கப்பட்ட திட்டக் கமிஷன் மீண்டும் நிறுவப்படும்
- நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு
- நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும்
- பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்க சட்ட திருத்தங்கள் செய்யப்படும்
- குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA-2019) ரத்து செய்யப்படும்
- கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஒரு GB டேட்டாவுடன் இலவச சிம் கார்டைப் வழங்கப்படும்
- அந்தந்த மாநில மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 50% இட ஒதுக்கீடு
- வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும்
- திட்டக் கமிஷன் போன்று நிரந்தர நிதி ஆணையம் அமைக்கப்படும்
- கூடுதலாக வசூலிக்கப்படும் வரிகளின் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும
- அனைத்து கடலோரப் பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்படும்
- மாநிலம் முழுவதும் அனைத்து முக்கிய இடங்களிலும் இலவச Wi-Fi சேவைகள் வழங்கப்படும்
- விமானப் பயணத்தைப் பயன்படுத்துவதில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவ விமானக் கட்டணம் ஒழுங்குபடுத்தப்படும்
- ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
- அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் முக்கிய யாத்திரை தலங்கள் உள்ள நகரங்களில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும்
- ராபர்ட் கால்டுவெல் மொழி ஆராய்ச்சி மையம் இந்தியாவில் நிறுவப்படும்
- இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும்
- இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்
- இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் நலன் காக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
- ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்டு சட்டப்பேரவைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்
- காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்
- நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது
- UPSC கமிட்டியில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்
- கல்வி மற்றும் சுகாதாரத் துறை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்
- கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களுக்குப் பாதகமான அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்படும்
- மாநில கல்வி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும்
- புதிய கல்விக் கொள்கை (NEP-2020) திரும்பப் பெறப்படும்
- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கைவிடப்படும்
- ஒன்றிய அரசு விதித்துள்ள மாநிலங்களின் கடன் வாங்கும் திறன் மீதான புதிய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்
- நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்
- கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொண்டுவரப்படும்
- மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்
- மாணவர்களுக்கு 4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக் கடன் வழங்கப்படும்
- பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான நிதி இரட்டிப்பாக்கப்படும்
- தமிழ்நாட்டின் நான் முதல்வன் மற்றும் புதுமை பென் திட்டங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்
- தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்
- கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்
- தமிழ்நாட்டில் புதிய IIT, IIM பல்கலைக்கழகங்கள் கட்டப்படும்
- பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்
- காவிரி, தாமிரபரணி மற்றும் வைகை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்படும்
- சென்னையில் கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்
உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது.