மிகவும் மோசமான நிதிநிலைகளை கொண்ட பல்வேறு நிறுவனங்கள், தாங்கள் ஈட்டும் மொத்த நிகர லாபத்தை விட பல மடங்கு மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளித்துள்ள தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019-20 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரையில், நிறுவனங்கள் ஈட்டிய மொத்த நிகர லாபம் மற்றும் தாங்கள் வாங்கிய மொத்த தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் பின்வருமாறு:
- 215 கோடி ரூபாய் ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய Future Gaming & Hotel Services நிறுவனம், 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி இருக்கிறது. இது நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் சுமார் 635 சதவிகிதம்(%) அதிகமாகும்.
- Megha Engineering & Infrastructures நிறுவனம் 7,509 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிய நிலையில், 966 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் 12 சதவிகிதமாகும்.
- 109 கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய Qwik Supply Chain நிறுவனம் சுமார் 410 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இது நிகர லாபத்தை விட சுமார் 377 சதவிகிதம்(%) அதிகமாகும்.
- Madanlal நிறுவனம் 10 கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய நிலையில், 185 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கி இருக்கிறது. நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் சுமார் 1,874 சதவிகிதம்(%) அதிகமாக இருப்பது தெரியவருகிறது.
- இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Bharti Airtel, தான் ஈட்டிய 253 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்து சுமார் 72 சதவிகிதம்(%) அதாவது 183 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை அளித்துள்ளது.
- 58 கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே ஈட்டிய MKJ Enterprises நிறுவனம், 192 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கி உள்ளது. இது நிறுவனத்தின் நிகர லாபத்துடன் ஒப்பிட்டால், சுமார் 329 சதவிகிதம்(%) அதிகமாகும்.
- Vedanta நிறுவனம் ஈட்டிய 48,372 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபத்தை ஒப்பிட்டால் 1 சதவிகிதமாகும்.
- 1,274 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிய Haldia Energy நிறுவனம் சுமார் 377 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இது நிகர லாபத்தை விட சுமார் 30 சதவிகிதம்(%) அதிகமாகும்.
- Essel Mining நிறுவனம் ஈட்டிய 3,700 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்து 224 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி இருக்கிறது. நிறுவனத்தின் நிகர லாபத்தில் இது 6 சதவிகிதம்(%) ஆகும்.
- Utkal Alumina நிறுவனம் 3,713 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டிய நிலையில், 145 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை அளித்துள்ளது. இது நிறுவனத்தின் நிகர லாபத்தில் 4 சதவிகிதம்(%) ஆகும்.
மேற் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த லாபமும், தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கிய தரவுகளும் மிகுந்த அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.