
மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போடுகிறது ஒரு கூட்டம். இதைக்கண்டு என்னங்க சார் உங்க நியாயம்? என்று கடுப்பாகிறார்கள் ரசிகர்கள்.
குணா படத்திற்கு பிறக்கு கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமானது. பல வருடங்களுக்குப் பிறகு அதே குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சுமேல் பாய்ஸ் படத்தினால் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.
நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு, கடந்த 2024ஆம் ஆண்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்று தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் ரிலீஸ் ஆனது.

ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததால் மலையாள சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழி சினிமாவும் வாய் பிளந்தது.
ஆனால் இன்றைக்கு மலையாளத்தின் உச்ச நடிகர் மோகன்லால், முன்னணி நடிகர் பிரித்விராஜ் இணைந்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு திரைக்கு வந்த எம்புரான் திரைப்படம் 10 நாளில் 100 கோடி ரூபாய் அள்ளியதாக சொல்கிறார்கள்.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், மஞ்சுமல் பாய்ஸ் உலக அளவில் ஒரு வருடத்தில் ஈட்டிய வசூலை எம்புரான் படம் 10 நாளிலேயே ஈட்டிவிட்டது என்று கொக்கரிக்கிறார்கள்.
மஞ்சுமல் பாய்ஸ் படம் சின்ன பட்ஜெட் படம் – எம்புரான் படம் பெரிய பட்ஜெட் பெரிய ஸ்டார்ஸ் நடித்திருக்கும் படம். மலைக்கும் மடுவுக்கும் முடுச்சு போடுவதா?
ரசிகர்களுக்கு இதைப்பார்த்தால் கடுப்பாகாதா பின்னே? கண்டபடி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.