நெருங்கிவிட்டது 2026 தேர்தல். காலம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. இதைப்புரிந்துகொண்ட அனுபவம் வாய்ந்த பெரிய கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. ஆனால், தவெக நிர்வாகிகளோ இப்போதுதான் அரசியலில் நீந்த கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
பூத் கமிட்டி ஏஜெண்ட், வாக்காள் பட்டியல் திருத்தப்பணிகள் என்பது பற்றி கூட எந்த தெளிவும் இல்லாமல் உள்ளனர் தவெகவினர் என்கிறது பிரபல ஆங்கில நாளிதழ். தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த கட்சிகள் இந்தப்பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டிருக்கிறது.
அதே போன்று விஜய்யும், தவெக தொண்டர்களின் பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பாருங்கள். தவெகவினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட சதி நடக்கிறது என்று நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். இதில் என்ன சதி நடக்கப்போகிறது. அதை எல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துகொள்ளும் என்கிற மனநிலையிலேயே நிர்வாகிகள் இருப்பதால் ஸ்ரெயிட்டா சிம் என்கிற கனவில் இருக்கும் விஜய்க்கு, இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு எப்படி தேர்தலை சந்திப்பது? என்று தலையில் கை வைத்துக்கொண்டிருக்கும் நிலைமை வந்துவிட்டது.
தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்த விஜய், புஸ்லி ஆனந்துக்கு அதிரடினான சில உ த்தரவுகளை போட்டிருக்கிறார்.
அனுபவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களை கட்சிக்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இருக்கிறது. அரசியலில் இருந்து முழு ஓய்வு பெற்றவர்களை கட்சிக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். அரசியல் முதிர்ச்சி உள்ளவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைக்க வேண்டும். அவர்கள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்த வேண்டும். அதனால்
மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துங்கள். நமது கட்சியில் உள்ள துடிப்பானவர்களை தேர்ந்தெடுங்கள். நல்ல அரசியல் தெளிவு உள்ள மாற்றுக்கட்சியினரும் நமது கட்சிக்குள் வர நினைத்தால் அவர்களை உடனே கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய பொறுப்புகளை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருப்பதாக தகவல்.
கட்சி தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய கட்டமைப்பு பணிகளை எல்லாம் அவசரகதியில் கட்சி தொடங்கி அதுவும் மாநில மாநாட்டையும் நடத்திய பின்னர் செய்வது வேடிக்கையாக இருக்கிறது என்கிற விமர்சனங்களை முன்வைக்கின்றன பிரபல ஆங்கில நாளிதழ்கள்.