இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நிலவும் பல சவால்களை விவரித்து The Hindu Business Line கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் $28 பில்லியனாக இருந்த FDI முதலீடுகள், 2023-24 நிதியாண்டில் $9.8 பில்லியனாக கணிசமாக சரிந்துள்ளது.
உலகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளில் ஒப்பிடும்போது, 2020-ம் ஆண்டில் 6.6%-ஆக இருந்த இந்தியாவின் பங்கு 2023-ல் 2.2% ஆக குறைந்துள்ளது.
வியட்நாம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், தி கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் FDI விதிகள், அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒன்றாக உள்ளதாக The Hindu Business Line கூறுகிறது.
பெரும்பாலான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (BITs) நிறுத்துவது அல்லது மறுபரிசீலனை செய்யும் இந்தியாவின் முடிவால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) எட்டுவதில் இந்தியா கவனம் செலுத்தத் தவருவதால், SDGs சார்ந்த வாய்ப்புகளைத் தேடும் முதலீட்டாளர்களை இந்தியா இழக்கிறது.
இன்சூரன்ஸ், இ-காமர்ஸ் மற்றும் பல சில்லறை விற்பனை போன்ற துறைகளை மேலும் தாராளமயமாக்க வேண்டும் என The Hindu Business Line பரிந்துரை செய்கிறது.
வெளிநாட்டு முதலீடுகளை சிறப்பாக எளிதாக்கவும் தக்கவைக்கவும் இந்தியா தனது நிறுவன திறனை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறது.