புது டெல்லி: ஃபிட்னஸ்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான Fittr, உடல்நலம் மற்றும் செயல்திறனைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைத்த FITTR HART என்கிற புதிய ஸ்மார்ட் வளையத்தை(Ring) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட் ரிங்கின் விலை 18,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாம் உறங்கும் நேரம், உடல் செயல்திறன் அளவீடுகள் மற்றும் இதய துடிப்பு மாறுபாட்டின் நிகழ்நேர அளவீடுகள் (HRV) ஆகியவற்றுடன் விரிவான சுகாதார கண்காணிப்பை FITTR HART ஸ்மார்ட் ரிங் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரும வெப்பநிலையை அளவிடுவது உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடலியல் மாற்றங்கள் தொடர்பான முக்கியத் தகவல்களை வழங்குவதன் மூலம் FITTR HART ஸ்மார்ட் ரிங் மற்ற நிறுவனங்களின் சாதனங்களை விட மிகத் தனித்துவமானது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதய துடிப்பு மாறுபாட்டின் நிகழ்நேர அளவீடுகள்(HRV) உள்ளிட்ட முக்கியமான சுகாதார அளவீடுகளை உடனடியாக தெரிந்து கொள்ள முயல்வோருக்கு இந்த ஸ்மார்ட் மோதிரம் பேருதவியாக இருக்கும். இதயத் துடிப்புப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும் ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காணவும் நோயின் போக்கை மதிப்பிடவும் இந்த ஸ்மார்ட் ரிங் உதவும் என கூறப்படுகிறது.
இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் (IDC) சமீபத்திய தரவுகளின்படி, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் Ear Wear மாடல்களை தவிர ஸ்மார்ட் ரிங்குகளும் உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரிங்குகளை வாங்க நுகர்வோர்கள் அதிக ஆர்வத்தை காட்டுவதாக, கூறப்படுகிறது.
hart.fittr.com என்கிற இணையத்தில் FITTR HART ஸ்மார்ட் ரிங் பிரத்யேகமாக முதல் 1,000 பயனர்களுக்கு(15,199 ரூபாய்) 20 சதவீத தள்ளுபடி விலையுடன் வருகிற மார்ச் மாதம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.