
பாமக எம்.எல்.ஏக்கள் 5 பேரில் 3 பேர் அன்புமணிக்கு ஆதரவு. 2 பேர் ராமதாசுக்கு ஆதரவாக உள்ளனர். சட்டமன்றத்தில் அன்புமணி அணிக்கே பெரும்பான்மை உள்ளது.
இதனால் பாமகவின் சட்டமன்றக்குழு தலைவர், துணைத்தலைவர், கொறடா ஆகியோரை மாற்றி அமைத்துள்ளார் அன்புமணி.
மேட்டூர் சதாசிவம், பென்னாகரம் ஜி.கே.மணி, தருமபுரி வெங்கடேஷ்வரன், சேலம் இரா.அருள், மயிலம் சிவக்குமார் ஆகிய 5 பேரில் ஏற்கெனவே பாமக கொறடாவாக இருந்த அருள் ராமதாசின் ஆதரவாளர். இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்கிறது அன்புமணி தரப்பு. ஆனால், அவரை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நான் தான் உண்மையான பாமக என்கிறார் ராமதாஸ். பாமகவின் பொதுச்செயலாளர் அருள் என்கிறார் ராமதாஸ்.

இது ஒரு புறமிருக்க, பாமக சட்டமன்றக் குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அன்புமணி அறிவித்துள்ளார். தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரனை சட்டமன்ற பாமக தலைவராக தேர்வு செய்துள்ளனர்.
25 ஆண்டுகளாக பாமகவின் தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி. 20 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக உள்ளார். அன்புமணிக்காக தனது தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜி.கே.மணி. இன்றைக்கு அவரின் பதவியை பறித்துள்ளார் அன்புமணி.

வரும் அக்டோபர் 14ம் தேதி சட்டப்பேரவை கூடவிருக்கும் நிலையில் பேரவையில் முதல்வரிசையில் பாமகவின் சட்டமன்றக் குழுவின் தலைவராக வெங்கடேஸ்வரனை அமைக்க வேண்டும்அன்புமணியின் ஆதரவாளர்கள் சட்டப்பேரவை செயலர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதற்கு ராமதாஸ் தரப்பு என்ன பதில் சொல்லப்போகிறதோ?
பேரவையின் முதல்வரிசை நாற்காலிக்கு நடக்கும் இந்த மோதல்தான் தங்களின் அதிகாரம் என்பதால் இரு தரப்பிலும் பிடிவாதமாகவே உள்ளனர். இந்நிலையில், ராமதாசுக்கு தற்போது மூன்று காவலர்கள் பாதுகாப்புக்கு உள்ள நிலையில் காவலர்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.