இந்திய அளவில் உலகளாவிய திறன் மையங்களை(Global Capability Center) ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களின் திறன் மையங்களை அமைத்துள்ளன.
இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களின் ஹாட்ஸ்பாட்-ஆக தமிழ்நாடு உருவெடுத்துள்ள நிலையில், இதன் மூலம் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca சென்னையில் உள்ள அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது; உலகளவில் AstraZeneca நிறுவனத்தின் மிகப்பெரிய மையமாக சென்னை மையம் திகழ உள்ளது.
AstraZeneca மட்டுமல்லாமல், Pfizer மற்றும் Roche போன்ற மருந்து நிறுவனங்களும் சென்னையில் தங்களின் திறன் மையங்களை நிறுவியுள்ளன.
உலக வங்கி குழுமம் (சென்னையில் உலக வங்கியின் 2-வது பெரிய மையம்), Standard Chartered, Hitachi Energy, Renault Nissan, Caterpillar, Nokia, மற்றும் Ford போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் தங்களின் மிகப்பெரிய மையங்களை சென்னையை அமைத்துள்ளன.
2021 முதல் Adidas, Mizuho, UPS, Harman, Hitachi Energy, Deloitte USI, AT&T, ZoomInfo உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் திறன் மையங்களை சென்னையில் திறந்துள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் சுமார் 10 மில்லியன் சதுர அடியில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் திறன் மையங்களை சென்னையில் அமைததுள்ளன.
மாநிலத்தில் உயர்தர தயாரிப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க, கடந்த 2022 ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு முதல்முறையாக தனது ‘Research and Development’ கொள்கையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.