
நடிகர் விஜய்யுடன் நடிகை திரிஷா 6வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக அதிரடி தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'(The Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார்.
Goat திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தை தொடர்ந்து உருவாகி வரும் GOAT படத்திலும் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடிப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், திரிஷா கேமியோ ரோலில் தான் நடிக்கிறார், அதுவும் ஒரு பாடலில் வருகிறார் என DT Next செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
“G.O.A.T ஒரு அறிவியல் புனைகதை திரைப்படமாக எடுக்கப்படுவதாகவும், படத்தில் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன”.
விஜய்யும் பிரபுதேவாவும் நடனமாடும் முதல் படமாக G.O.A.T இருக்கும் என கூறப்படுகிறது.
போக்கிரி படத்தின் அறிமுகப் பாடலான ‘போக்கிரி பொங்கலில்’ அவர்கள் சிறிய காட்சியில் ஒன்றாக நடனமாடியுள்ளனர். இருப்பினும், G.O.A.T இல் அவர்கள் இருவரும் ஒரு முழுப் பாடலில் ஒன்றாகக் காணப்படுவார்கள் எனவும் தகவல் கசிந்துள்ளது.
இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் திரிஷா, இரண்டு நாட்கள் படத்துக்காக ஷூட் செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. G.O.A.T படத்தின் அனைத்து கதிகாப்பாத்திரங்கள் உடனும் இணைந்து நடிகை திரிஷா நடன காட்சியில் காணப்படுவார், என்று DT Next செய்தி நிறுவனம் கூறியுள்ளது.