ஜூன் 29ம் தேதி சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மை விற்கும் ‘AirHub’ என்ற கடையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்அப்போது அந்த கடையின் பணியாளர் ஒருவர் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க பேஸ்ட்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் யூடியூபர் சபீர் அலியை தங்க கடத்தில் தொடர்பு இருந்ததை அறிந்து அவருடன் சேர்த்து 9 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
யூடியூபர் சபீர் அலியிடம் நடத்திய விசாரணையில் விமான நிலையத்தில் கடை வைக்க 77 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை கொடுத்து இலங்கை தங்கக் கடத்தல் கும்பல் உதவியது தெரியவந்துள்ளது.
சபீர் அலி மற்றும் மேலும் இரண்டு நபர்களுக்கு விமான நிலையத்தில் கடைகளை வைக்க ‘Vidvedaa PRG’ என்ற ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் ‘பிரித்வீ’ என்பவர் விமான நிலைய இணை பொது மேலாளர் செல்வநாயகத்திடம் சிபாரிசு செய்துள்ளார்.
இந்த தங்கக் கடத்தில் வழக்கில் பிரித்வீ சிபாரிசு செய்த மேலும் இரண்டு கடைகளில் பணியாற்றிய 2 பணியாளர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Vidvedaa PRG நிறுவனத்தின் பணியாளர் பிரித்வீ தமிழக பாஜகவில் மாணவரணியில் மாநில பதவியில் இருந்து வந்துள்ளார்.
பிரித்வீயின் டிவிட்டர் கணக்கை பிரதமர் மோடி பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் பிரித்வீ முன்னாள் உதவியாளராக முன்னர் பணியாற்றி வந்துள்ளார்.
பிரித்வீ தன்னை அண்ணாமலையின் பிணாமி எனக்கூறி விமான நிலையத்தில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பண வசூல் செய்துள்ளார். பிரித்வீ வீட்டில் சோதனை நடத்த சென்ற சுங்கத்துறை அதிகாரிகளை அண்ணாமலை போனில் அழைத்து மிரட்டியதாகவும் தகவல்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல அரசியல் தலைவர்களுடன் பிரித்வீ நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் தெரியவந்த நிலையில் பிரித்வீயை Vidvedaa PRG நிறுவனம் பணி நீக்கம் செய்தது.
இதற்கிடையே ஜூன் 15-ம் தேதி அன்றே அண்ணாமலைக்கும் அவருடைய வார்ரூம் ஆட்களுக்கும் தங்கக்கடத்தல் மற்றும் மணல்கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதாகவும், இதைப்பற்றி பாஜக மேலி டத்தில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜூன் 19ம் அன்று கல்யாணராமன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தங்கக் கடத்தல் வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலையிட்டு கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளிடையே அண்ணாமலைக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்புள்ளதா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது!
இந்த நிலையில் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் 6 மாத பயணமாக லண்டன் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில் தனக்கு தொடர்பில்லை எனவும், தன்னைப் பற்றி பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாகவும் பாஜக பிரமுகர் பிரித்வீ விளக்கம் அளித்துள்ளார்.