செயற்கை நுண்ணறிவுப் (Artificial Intelligence) பற்றிய இலவச ஆன்லைன் படிப்புகளை Google நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
Google நிறுவனம் தனது AI Initiative சீரிஸில் புதிய லாங்குவேஜ் மாடலை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. AI துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயனர்கள் பெரும் வகையில், இந்த மேம்பட்ட படிப்புகளை Google நிறுவனம் வழங்கி வருகிறது.
Introduction to Generative AI: இந்தப் பாடத்தில் ஜெனரேட்டிவ் AI-யின் பயன்பாடுகள் மற்றும் Google கருவிகளுடன் Gen AI ஆப்களை உருவாக்கும் முறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
Introduction to Large Language Models: இந்த மைக்ரோ-லேர்னிங் பாடத்தில் லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள்(LLMs) மற்றும் அவற்றின் பயன்பாட்டுகள், செயல்திறன் மேம்பாட்டிற்கான Prompt Tuning ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Introduction to Responsible AI: இந்தப் பாடத்தில் ரேஸ்பான்சிபல் செயற்கை நுண்ணறிவைப் புரிந்து கொள்ளுதல், அதன் முக்கியத்துவம் மற்றும் Google தனது தயாரிப்புகளில் எப்படி அதை செயல்படுத்துகிறது போன்ற பாடங்கள் உள்ளன.
ஜெனரேட்டிவ் AI அடிப்படைகள்: மேற்கண்ட 3 பாடங்களின் அறிமுக விவரங்கள் தொகுத்து இந்த பாடம் முடிவடைகிறது. இந்தப் பாடத்தை முடிப்பவர்களுக்கு, Skill Badge வழங்கப்படும்.
Introduction to Image Generation: Vertex AI-ன் கோட்பாடுகள் மற்றும் அதுத் தொடர்பான பயிற்சிகளுடன் Image Generation செய்வது பற்றி இந்தப் பாடம் விளக்குகிறது.
Encoder-Decoder Architecture: இதில் மெஷின் லேர்னிங் ஆர்க்கிடெக்சர், அதன் கேள்வி பதில், சுருக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற வரிசைகளை உள்ளடக்கிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திர கற்றல் கட்டமைப்பு பற்றி கற்றுத் தரப்படுகிறது.
Attention Mechanism: இந்தப் பாடத்தில் Input Sequence-க்கு தேவையான நியூரல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விளக்குகிறது.
Create Image Captioning Models: இதில் இமேஜ் கேப்ஷனிங் மாடல்ஸ் மற்றும் என்கோடர்- டீகோடர் ஆர்க்கிடெக்சர் பற்றி கற்றுத் தரப்படுகிறது.
Introduction to Generative AI Studio: இந்த கோர்ஸில் ஜெனரேட்டிவ் ஏஐ ஸ்டூடியோ பற்றிய அடிப்படைகள் கற்றுத் தரப்படும். இதன் மூலம் நீங்கள் உங்களது அப்ளிகேஷன்களுக்கு Prototype மற்றும் Generative AI மாடல்களை உருவாக்குவதற்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேற்கண்ட Google நிறுவனத்தின் இந்தப் பாடங்கள் அனைத்தும் www.cloudskillsboost.google என்கிற தளத்தில் கிடைக்கப் பெறுகிறது.