முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாமடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்திருக்கிறது. இந்த 7 இலட்சம் கோடி முதலீட்டின் மூலமாக 30 இலட்சம் பேருக்கு வாய்ப்புகள் உறுதியாகி இருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் கிடைந்த 2.97 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலமாக 4.15 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன், டிரோன் உள்ளிட்ட சாதனங்கள் தயாரிக்க கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கு வந்தது. பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், பெக்டரான் முன்னனி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.
டாடா பவர் நிறுவனம் 5-7 ஆண்டுகளில் 10 ஜிகாவாட் சூரிய மற்றும் காற்றாலை அலகுகளுக்கு ரூ.70,000 கோடி முதலீடு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் எனும் பம்ப் நிறுவனம் புதிய வாகன உற்பத்தி அலகுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ராணிப்பேட்டையில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது.
வியட்நாமைச் சேர்ந்த வின் பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 4 கோடி ரூபாய்க்கு எலக்ட்ரிக் தொழிற்சாலைக்கு முதலீடு செய்துள்ளது. செங்கல்பட்டில் கம்ப்யூட்டிங், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அலகு ஒன்றைத் திட்டமிடுகிறது பெகாட்ரான் நிறுவனம். பிக்சல் ஸ்மார்ட்போன்களை உருவாக்க ஃபாக்ஸ்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது கூகுள்.
உலக முதலீட்டார்கள் மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளும் அதன் மூலம் அதிக அதிக வேலைவாய்ப்புகளும் குவிந்துள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில்தான் 2024ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 7 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக 30 இலட்சம் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் என்பதால்தான் கூகுள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகம் முதலீடு செய்து வருகின்றன. வணிகம் செய்வதற்கான எளிமை, ஒற்றைச் சாளர அனுமதி, திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நிலக் கொள்கை மற்றும் முக்கிய முக்கிய சந்தைகளுக்கு அருகாமையில் துறைமுகங்கள் இருப்பதால் தமிழ்நாட்டில் இப்படி முதலீடுகள் அதிரிப்பதற்கு காரணம் என்று கூறுகின்றனர் தொழில் வல்லுநர்கள்.
மேலும் மேலும் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிப்பதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்புகொண்டு முதலீடுகளை கொண்டு வந்து சேர்ப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்த வண்ணம் உள்ளார்.
இதுகுறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘’திராவிட மாடல் ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கும், தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கும், முதலீட்டாளர்கள் எளிதாகச் செயல்படுவதற்கான நடைமுறைகளை அரசு நெறிப்படுத்தி உள்ளது.
குறிப்பாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் திறமையான வல்லுனர்களின் பெரும் தொகுப்பிற்கு மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன’’ என்கிறார்.
நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’திராவிட மாடல் அரசின் சாா்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளா்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், ‘முதலீட்டாளா்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடிக்கான முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூா், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அதன்மூலம் 17, 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில், ரூ.7,441 கோடி முதலீடுகளைப் பெற்றோம். அதுமட்டுமல்லாமல் இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதைக் கண்காணிப்பேன்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரைக்கும் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 ஆலைகளைத் திறந்திருக்கிறோம். இதன்மூலம், 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து நடைபெறும் இந்த மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும்’’என்று பெருமையுடன் கூறினார்.
முதல்வர் சொன்னது மாதிரியே தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.