உங்கள் அலுவலகத்தில் தினமும் செய்ய வேண்டிய சலிப்பூட்டும் வேலைகள் இருக்கிறதா? ஒரே மாதிரி மின்னஞ்சல்கள், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய டைப்பிங் வேலைகள், டாக்குமென்ட்கள் தேட வேண்டிய அவஸ்தை, கூட்டங்களுக்கு காலண்டர் நிரப்புவது… இப்படி பல வேலைகளால் தலை சுற்றுகிறதா?
இப்போ அந்த சுமையை குறைக்க Google ஒரு பெரிய அமசத்தை கொண்டுவந்துள்ளது. அது தான் Gemini AI-யால் இயக்கப்படும் Google Workspace Studio!
கூகுள் Workspace-ல் இனி ஒரு புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த “Workspace Studio” என்ன செய்யும் தெரியுமா?
நீங்களே உங்களுக்கான AI உதவியாளர்களை உருவாக்கலாம், அதுவும் எந்த கோடிங் அறிவும் இல்லாமல்.
AI முகவர்கள் என்றால் என்ன?
உங்களுக்கு வேலை செய்வதற்காக உருவாக்கப்படும் “சிறிய AI உதவியாளர்”தான் AI Agent.
உதாரணம்:
- தினமும் வந்த மின்னஞ்சல்களைக் கண்காணித்து முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்காட்டு.
- எனது குழுவிற்கு வாராந்திர ரிப்போர்ட் உருவாக்கு.
- எல்லா புதிய ஃபைல்களையும் சரியான கோப்புறைக்கு மாற்று.
- என் காலண்டரில உள்ள கூட்டங்களை முன்னேறி அமைத்து நினைவூட்டு என இப்படி வாயில் சொல்லவது போல நீங்கள் டைப் செய்தால் போதும்.
AI Agent உருவாகி அந்த வேலைகளை தானாகவே அது செய்து விடும்.
இது தான் Workspace Studio-வின் மாபெரும் சக்தி!
ஏன் Workspace Studio பெரிய விஷயம்?
இன்று அதிகமான நிறுவனங்கள் சிக்கலான வேலைகளை எளிதாக்க AI பயன்படுத்தணும் என்று நினைக்கிறது.
ஆனால் AI Tool-களை கையாள தொழில்நுட்ப அறிவு, Coding, Integrations , permissions என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதை கூகுளை இப்பொது முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
இப்போது எல்லா ஊழியரும், மேலாளர், மார்கெட்டிங் பர்சன், டீம் லீடர் என அனைவராலும் தங்கள் வேலைக்கு ஏற்ற AI உதவியாளரை உருவாக்க முடியும்.
AI-யை எல்லோரின் கைகளில் வைத்து அவர்கள் வேலை செய்யும் முறையை ஸ்மார்ட் ஆக்குறதே எங்களின் நோக்கம் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
Workspace Studio என்னென்ன செய்யும்?
1. கோடிங் தெரியாமலேயே AI உருவாக்கலாம்
நீங்க செய்ய வேண்டிய வேலையை சாதாரண தமிழ் அல்லது English-ல எழுதினாலே:
முழு AI Agent உருவாக்கி, வேலைகளை படிப்படியாக செய்து முடிக்கும்
உதாரணம்:
“Daily incoming emails-லிருந்து முக்கியமான project updates-சை மட்டும் எடுத்து Excel-ல் ஏற்றி, அதை டீம்-க்கு அனுப்பு என சொன்னால் அதை அது செய்து முடித்து விடும்.
இதனை Workspace Studio முழுவதும் ஆட்டோமேஷன் ஆக மாற்றிவிடும்.
2. எளிய வேலைகளும், கடினமான திட்டங்களும் கையாளும்
AI முகவர்கள் செய்யும் வேலைகள்:
✔ மின்னஞ்சல் வகைப்படுத்தல்
✔ காலண்டர் திட்டமிடல்
✔ டாக்குமென்ட் ஒழுங்குபடுத்தல்
✔ Reminder / Follow-up
✔ Data Entry
✔ Meeting Summary
✔ Legal Notice Tracking
✔ Project Management
✔ Multi-step workflows
சின்ன வேலையிலிருந்து பெரிய, பல படி கொண்ட சிக்கலான வேலை வரைக்கும் அனைத்தையும் இது பார்த்துக்கொள்ளும்.
3. உருவாக்கிய AI-யை சக ஊழியர்களுடன் பகிரலாம்
Google Drive-ல் ஒரு ஃபைல்-ஐ Share பண்றதுபோல, நீங்கள் உருவாக்கிய AI முகவரையும் Share ஆக்கலாம்.
. கூட்டு வேலைகளில் இது ரொம்ப பயனுள்ளது
. நிறுவனத்தில் ஒரே மாதிரி வேலைகளை எல்லாரும் ஒத்த முறையில் செய்ய முடியும்
4. Gmail, Drive, Docs, Sheets, Chat – அனைத்திலும் வேலை செய்யும்
இந்த AI Agents தனித்தனியா இல்லை; Google Workspace-க்கு நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்:
- Gmail
- Drive
- Docs
- Sheets
- Slides
- Chat
- Calendar
எதிலும் இந்த AI முகவர்கள் வேலை செய்யும்.
Gemini 3 மாடலின் சக்தி
Workspace Studio-வின் இதயமே Gemini 3.
இந்த மாடல் மிகவும் புத்திசாலி:
சூழலைப் புரிந்துகொள்ளும்
உங்களது நிறுவன கொள்கை, டாக்குமென்ட் நடையைப் புரிந்து செயல்படும்.
உணர்வுகளைப் (Sentiment) புரிந்துகொள்ளும்
ஒரு மின்னஞ்சல் கோபமா, நன்றியா, அவசரமா என்பதை உணர்ந்து அதன்படி பதில் எழுதவும் முடியும்.
சொல்லாமலே புரிந்துகொள்ளும்
சமீபத்தில் நடந்த வேலைகள், புதிய அப்டேட்கள், ரிப்போர்ட்கள் — இவை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படும்.
Autonomous Decision-Making
அதாவது, சிறிய மாற்றங்கள் வந்தாலும் AI தானே முடிவு எடுத்து வேலை செய்யும்.
மூன்றாம் தரப்பு செயலிகளுடனும் சேர்ந்து வேலை செய்யும்
Google Workspace Studio-வின் AI முகவர்கள் Google Tools மட்டுமின்றி:
- Asana
- Jira
- Trello
- Salesforce
- Hubspot
- Mailchimp
இப்படிப்பட்ட பெரும்பாலான வேலை மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் கருவிகளுடனும் இணைந்து வேலை செய்யும். இதுவே Workspace Studio-வின் மிகப் பெரிய மாற்றம்.
இது யாருக்கு பயன்?
1. அலுவலக ஊழியர்கள்
- தினசரி மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகள் AI-க்கு ஒப்படைக்கலாம்
- கவலை குறையும், உற்பத்தி திறன் அதிகரிக்கும்
2. மேலாளர்கள்
- ரிப்போர்ட்கள்
- Project tracking
- Reminder systems-ல் தானாக செயல்படும்
3. HR குழு
- Candidate tracking
- Joining process
- Policy updates என அணைத்து எல்லாம் ஆட்டோமேஷன் உறுதி!
4. மார்கெட்டிங் / Sales
- Email campaigns
- Customer follow-ups
- CRM updates
AI தானா செய்து விடும்.
5. சிறிய நிறுவனங்கள்
பணியாளர்கள் குறைவு இருந்தாலும் AI வேலைகளை சமமாக கையாளும்.
நாம் எதிர்கொள்ளும் எதிர்காலம்?
கூகுள் இதை தெளிவாகச் சொல்கிறது:
அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட AI உதவியாளர்களுடன் வேலை செய்யும் காலம் ஆரம்பமாகிவிட்டது.
காலம் என்ன?
- AI செய்வது – வேலை அல்ல, வேலை செய்யும் முறையே மாறுவது.
- தினசரி சலிப்பூட்டும் வேலைகள் AI-க்கு போகும்.
- மனிதர்கள் முக்கியமான சிந்தனை, திட்டமிடல், படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
Workspace Studio இதுதான் உருவாக்கப் போகிறது.
Google Workspace Studio என்பது ஒரு கருவி மட்டும் இல்லை.
இது:
- புத்திசாலியான வேலை சூழல்
- தனிப்பட்ட AI உதவியாளர்
- மெதுவான வேலைகளை அகற்றும் தீர்வு
- வேலைகளை வேகமாக்கும் நவீன AI புரட்சி
வேலை செய்யும் முறையே கடந்த காலத்திலிருந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறத்தான் போகிறது. Workspace Studio = உங்களுக்கான AI Team Mate!
