நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சரா? வரி அமைச்சரா? என்று கேட்டு எக்ஸ் தளத்தை சூடாக்கி இருக்கிறார்கள் மக்கள்.
டிசம்பர் 21ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு சிகரெட், புகையிலை மற்றும் சில குளிர்பானங்கள் மீது 35% ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
’’இப்படி வரிமேல் வரி போட்டு வறுத்தெடுக்கும் ‘இவர் வரி நிதி அமைச்சரா?அமைச்சரா?’’, ’’வருமானத்தில் 40% வரியை எடுத்துக்கொள்ளும் ஒன்றிய அரசு, வாங்கும் அத்தனைக்கும் 35% ஜி.எஸ்.டி. கேட்கிறது. இது நடுத்தர வர்க்கத்திடம் திட்டமிட்டு அடிக்கப்படும் கொள்ளை’’, ’’போகிற போக்கைப் பார்த்தால் சுவாசத்திற்கும் வரி போடும் போலிருக்கிறது பாஜக அரசு’’, ‘’40% வருமான வரியை கட்டிவிட்டு வாங்கும் அத்தனைக்கும் 35%ஜி.எஸ்.டி கட்டிவிட்டு நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போது கோகோ கோலா குடிக்க எங்கே நேரம் இருக்கப்போகுது? ’’ என்று கொந்தளிக்கிறார்கள்.
Also Read: வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்… கடும் சரிவில் GDP..! என்ன காரணம்?
’’35% என்பது ஆரம்பம்தான் ப்ரோ, 125% வரை உயர்த்துவேன்’’ என்று நிர்மலா சீதாராமன் சொல்வது போன்றும் பதிவிட்டு வருகின்றனர்.
‘’மத்தியில் எங்களுக்கு நிதி அமைச்சர் இல்லை. வருவாய்த்துறை அமைச்சர்தான் இருக்கிறார்’’ என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.