திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் பேஸ்மென் பட நிறுவனத்திற்கு இடையேயான காசோலை தொடர்பான பிரச்சனையில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தீர்ப்பின்படி லிங்குசாமிக்கும் அவரது சகோதரர் சந்திரபோஸ்க்கும் அளிக்கப்பட்டிருந்த தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்யவிருக்கிறது. இதற்கிடையில் லிங்குசாமியும் சந்திரபோசும் கைது செய்யப்பட உள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு பேஸ்மேன் பைனான்ஸ் நிறுவனத்திடம் 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளது திருப்பதி பிரதர்ஸ். வட்டியுடன் சேர்த்து திருப்பி கொடுப்பதாக லிங்குசாமி கொடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டது என்று சொல்லி பேஸ்மேன் நிறுவனம் வழக்கு தொடந்தது. இந்த வழக்கில் லிங்குசாமி, போஸ் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இரண்டு மாதங்களுக்குள் பணத்தை திரும்ப செலுத்த தவறினால் 2 வருடங்கள் சிறை தண்டனை என்றும் விதித்தது நீதிமன்றம்.
தற்போது இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாமல் போனால்தான் இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
மேல்முறையீட்டில் தங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும் என்கிறது திருப்பதி பிரதர்ஸ். இதற்கிடையில் லிங்குசாமியும் போஸும் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி பரவுவதால் அது தவறான தகவல் என்று லிங்குசாமியும், போஸும் மறுத்துள்ளனர்.
