இந்தியாவில் 45-59 வயதுக்குட்பட்ட 22 கோடி நடுத்தர வயது மக்கள் (அல்லது மொத்த மக்கள்தொகையில் 16.2 சதவீதம் பேர்) பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலகளாவிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பலவீனம் (Frailty) என்பது மனித உடலில் உள்ள பலவீனமான நிலையைக் குறிக்கிறது, இது மக்களை எளிதில் நோய்கள், காயங்கள் மற்றும் பிற உடல் உபாயத்திற்கு ஆளாக்குகிறது.
உடல் ‘பலவீனம்’ பொதுவாக வயதானவர்களுடன் தொடர்புடையது என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் பாதிக்கக் கூடியது இல்லை.
BMJ Open தளத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், நடுத்தர இந்தியர்களிடையே ‘பலவீனம்’ அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்களை விட பெண்கள் இருமடங்கு பலவீனமாக இருப்பதாக இந்த ஆய்வுக் கூறுகிறது. புகையிலையைப் பயன்படுத்துவதும் இந்தியர்களிடையே பலவீனத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக அதிகப் பணத்தைச் செலவழிப்பவர்களிடம் ‘பலவீனம்’ மிகவும் பொதுவானதாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் (டெல்லி மற்றும் ஆஸ்திரேலியா) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.