கல்லீரல் அழற்சி (Hepatitis A) தொற்றுநோய்க்கு எதிராக முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு-டோஸ் தடுப்பூசியான ‘Havisure’, கல்லீரல் அழற்சி-ஏ நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Indian Immunologicals நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
Havisure தடுப்பூசியை அங்கீகரித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI), Hepatitis A நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு செலுத்தப்படும் வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளோடு சேர்த்து Havisure தடுப்பூசியையும் DCGI பரிந்துரை செய்துள்ளது.
குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குப் பிறகு முதல் டோஸும், முதல் டோஸ் செலுத்தப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு 2வது டோஸ் செலுத்த DCGI பரிந்துரைத்துள்ளது.
கல்லீரல் அழற்சி வகை ஏ (Hepatitis A)
கல்லீரல் அழற்சி வகை ஏ (Hepatitis A) என்பது ஹெபடைடிஸ் ஏ வைரசால் (HAV) கல்லீரலில் ஏற்படும் கடுமையாகத் தொற்றக்கூடிய நோயாகும்.
அசுத்தமான உணவு உண்ணுவதாலும் அல்லது தண்ணீரை அருந்துவதாலும் பொதுவாக இந்த நோய் பரவுகிறது.
Hepatitis A நோய் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகினால், பிறருக்கும் இந்த நோய் பரவும் அபாயம் ஏற்படும்.
குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது அறிகுறிகள் எதுவும் இருக்காது என்பதால், எளிதில் மற்றவர்களுக்கும் இது தொற்றக்கூடிய நோயாகும்.
Published by அசோக் முருகன்