தமிழக பாஜகவுக்கு யார் புதிய தலைவராக வந்தாலும் அவரின் ஹனிட்ராப் விவகாரங்கள் வெளியாகும் சூழல் இருப்பதால் கலக்கத்தில் இருக்கிறது கமலாலயம்.
படிக்கப்போகிறேன் என்று சொல்லி தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்வதால் அவருக்குப் பதிலாக புதிய தலைவரை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வெளிநாடு சென்றாலும் அங்கிருந்தபடியே நானே கவனித்துக்கொள்கிறேன் என்று அண்ணாமலை சொன்னாலும் அதை டெல்லி தலைமை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
இதனால் புதிய தலைவர் என்கிற முடிவு உறுதியாகிவிட்டதால் அதற்கான போட்டியில் பலரும் உள்ளனர். நயினார் நாகேந்திரனுக்குத்தான் அந்த பொறுப்பு வழங்கப்படும் என்று அதிகம் பேச்சு எழுந்திருக்கிறது. வானதி சீனிவாசனை அந்த பொறுப்புக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் முயன்று வருவதாகவும் தகவல் பரவுகிறது. சர்ச்சையில் சிக்கினாலும் நிர்மலா சீத்தாராமனின் ஆதரவு இருப்பதால் கே.டி.ராகவனும் இந்தப் போட்டியில் உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
இந்தப் போட்டி பட்டியலில் இப்போது பொன்.ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபடுகிறது. கட்சியின் சீனியர்கள் பலரும் பொன்னாரின் வருகையைத்தான் விரும்புவதாகவும் சொல்கிறது கமலாலயம்.
இது ஒரு புறமிருக்க, எங்க தலைவரை தவிர்த்து யாரை புதிய தலைவராக கொண்டு வந்தாலும் அவர்களின் ஹனிட்ராப் விவகாரங்களை வெளியிடுவோம் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக நக்கீரன் புலனாய்வு இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
கட்சியில் எப்போது வேண்டுமானாலும் அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அப்போது பழிவாங்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு தமிழக பாஜக பொறுப்பாளர்களின் ஹனிட்ராப் வீடியோக்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள் என்பதால் கலக்கத்தில் இருக்கிறது கமலாலயம்.