லிங்கா படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைகிறார் சந்தானம். ஜெயிலர் -2 படத்தில் நடிக்கிறார்.
ஜெயிலர்-2 படத்தில் சந்தானம் இருந்தால் சரியாக இருக்கும் ரஜினி விரும்பியதால் அவரின் விருப்பத்தை தட்ட முடியாமல் நடிக்கச் சம்மதித்துள்ளார் சந்தானம்.
தவிர சுந்தர் .சி இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த படத்திலும் சந்தானம் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். சுந்தர்.சி அந்தப்படத்தில் இருந்து விலகியதால் அது அமையாமல் போய்விட்டது.

இந்நிலையில், சந்தானத்தின் நெருங்கிய நண்பராக இருந்த மறைந்த நடிகரும் டாக்டருமான சேதுவின் மனைவி தொடங்கும் புதிய நிறுவனத்தின் விழாவுக்கு குத்துவிளக்கு ஏற்ற வந்த சந்தானத்திடம், ஜெயிலர் -2 படத்தில் நடிக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ’’ஆம்…’’என்று சொல்ல வந்தவர், இப்போது சொல்ல வேண்டாம் என்று தவிர்த்து, இது என்ன கள்ளக்காதலா மறைப்பதற்கு நானே பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
