பன்னீர்செல்வம், தினகரன்,சசிகலா, வைத்திலிங்கம் போன்றோரைப்போல் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தியும் மீண்டும் அதிமுகவில் சேர முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால் சேர்க்க முடியாது என்று ஆரம்பத்தில் இருந்தது மாதிரியே இப்போதும் எடப்பாடி பழனிசாமி ரொம்பவே பிடிவாதமாக இருப்பதால் நம்பிக்கை இழந்துவிட்டார் பெங்களூரு புகழேந்தி.

அதிலும் நேற்று நடந்த அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்ற பேச்சே எழவில்லை. மாறாக ‘துரோகிகள்’ என்று சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, பழனிசாமி உள்ளிட்டோர் மாறி மாறி உரக்க குரல் எழுப்பினர். இதில் மேலும் நம்பிக்கை இழந்துவிட்டார் பெங்களூரு புகழேந்தி.
அதனால்தான் அவர், ‘’இனி எக்காலத்திலும் விலக்கப்பட்டவர்களை பழனிசாமி மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டார் பழனிசாமி. அது உறுதியாகிவிட்டது. அதே போன்று இனி எக்காலத்திலும் பழனிசாமி முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முடியாது. இதுவும் உறுதியாகிவிட்டது. 2026 தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி ஜெயிக்கும் என்கிறார் எடப்பாடி. உண்மை என்னவென்றால், நான் சேலஞ்ச் பண்ணுகிறேன் எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி டெபாசிட் இழக்கிறார்’’ என்கிறார்.

அவர் மேலும், ‘’10 தேர்தலில் திமுகவை வெல்ல முடியவில்லை. பேச்சு மட்டும் திமுகவை குறை சொல்லுவது. இதற்கெல்லாம் ஸ்டாலின் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றால் காரி துப்பி விட்டார் என்று அர்த்தம்’’என்கிறார் காட்டமாக.
